பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. திருக்குரங்கணில் முட்டம்

இத்தலம் காஞ்சிபுரத்திற்குத் தெற்கே மண் சாலையில் பாலாற்றின் தென் கரையில் உள்ளது. இத்தலத்தை அடையப் பஸ் (உந்து வண்டி) வசதி உண்டு. இத்தலத்தில் வாலியாகிய குரங்கும், அணி லும், காக்கையும் பூசித்துப் பேறு பெற்றுள்ள்ன. இக் காரணத்தால் இத்தலம், குரங்கு அணில் முட்ட்ட் என்னும் பெயரைப் பெற்றது. காக்கை முட்டம் என்னும் சொல்லால் உணர்த்தப்பட்டிருப்பதைக் காண்க. வாலி பூசித்த சிறப்பால் இறைவர் வாலீஸ் வரர் என்னும் பெயருடன் துலங்குகின்ருர், இறை வியாரின் திருப்பெயர், இறையார்வளே அம்மை என்பது. முன்கையில் வளையல் அணிந்த அம்மையார் என்பது இப் பெயரின் பொருள். இதனைத் திருஞான சம்பந்தர் தம் பதிகத்தில் இறையார் வளையாளை ஒர் பாகத் தடக்கி' என்று பாடிக் குறித்துள்ளனர். இங்குக் காக்கை மடுவு என்னும் பெயரிய மடு ஒன்று உண்டு. இது காக்கை தன் மூக்கினுல் கீறியதால் இப்பெயர் பெற்றது என்பர். குரங்கும், அணிலும், காக்கையும் பூசித்தன என்பதைக் குறிக்க ஆலயத் தின் நுழைவாயிலில் இம்மூன்றின் உருவங்களும் செய்து அமைக்கப்பட்டுள்ளன. கோயில் செம்மை யாக இல்லை. பாழ் அடைந்து காணப்படுகிறது. பாம்பு புற்றுகள் கோயிலுள் மிகுதி. முக்காலப்பூசை இல்லை. ஒரு வேளே பூசைதான் நடக்கிறது. இங்கு வாலி தீர்த்தம், நள கங்கை என்னும் பெயரில் இரண்டு தீர்த்தங்கள் உண்டு. இக்கோயில் கட்டிட அமைப்பை நோக்கின் பல்லவர் காலக் கட்டட அமைப்புப் போன்றது என்னலாம். • * . .

இத் தலத்துக் கல் வெட்டில் இறைவர் குரங் கணில் முட்ட நாயனர் எனவும், கொய்யா மலரீசுவர