பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it;8 தொலே உலகச் செலவு இங்ஙனம் கலங்களிரண்டும் இணைந்த பிறகு வோலிஒேவ் அவர்களின் துணையால் யெலிசயேவும் குருளுேவும் விண்வெளி உடைகளை அணிந்துகொண்டு தாமிருந்த கலத்தினின்றும் வெளிவந்து விண்வெளியில் நடந்து அடுத்த கலத்தினுள் துழைத்தனர். இவர்கள் இருவரும் தனித்தனியாக விண் வெளியில் நடந்தனர். ஒவ்வொருவரும் ஏறக்குறைய ஒரு மணிநேரம் விண்வெளியில் தங்கியிருந்தனர். குருகுேவ் சோவியத் நாட்டுப் பகுதியிலும் எலிச யேவ் இலத்தீன் அமெரிக்கப் பகுதியிலும் கூண்டிகளிலிருந்து வெளிவந்து விண்வெளியில் நடந்தனர். அடுத்த கலத்தினுள் நுழைந்த வடன் தம் உடைகளைக் கழற்றிவிட்டு ஷதலோவுடன் புதிய இடங்களில் அமர்ந்தனர். இவர்கள் இடம் மாறுங்கால் பல்வேறு அறிவியல் சோதனைகளே மேற்கொண்டதுடன் பல்வேறு உற்றுநோக்கல்களையும் செய்தனர். இணைப்புக் கலங்களிரண்டும் 4மணி 35 நிமிடங்கள் சுற்றுவழியில் இனைந்த வண்ணமே இயங்கி விண்வெளி நிலையமாகச் செயற்பட்டன. அதன்பிறகு அவை இரண்டும் கழற்றிவிடப்பெற்றன. மூன்ரும் நாள் சோயுஸ் - 4 அதன் தளகர்த்தர் வடிதலோவ் விண்வெளி வீரர்கள் எல்ஜெனி குருனேவ், அலெக்சியெலிசயேவ் ஆகிய மூவருடன் நடு ஆசியாவில் கஸகாஸ்டன் அடுக்கு மலையில் மெதுவாக இறங்கியது. இந்த இடம் சோயுஸ் - 4 அனுப்பப்பெற்ற பைக்கோனெளர் என்ற இடத்திலுள்ள விண்வெளிக்கல நிலையத்திலிருந்து (Cosmodrome) 600 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. வேகத்தைத் தடுக்கும் பொறி இயக்கப்பெறுவதற்கு முன்னர் விண்வெளி வீரர்கள் இரண்டறையுடன் கூடிய கப்பலினின்றும் தசையிலிறங்கும் கூண்டினுள் புகுந்து கொண்டனர். வேகத்தைத் தடுக்கும் பொறி இயக்கப்பெற்றதும், முழுக் கப்பலும் கீழ்நோக்கிய பாதையில் செல்லத் தொடங்கியது. விரைவில் கூண்டு கப்பலிலிருந்து கழன்று தான் இறங்கும் தரைப் பகுதியை நோக்கி நழுவி வந்தது. குதி குடை விரிந்து பின்னியங்கும் இராக்கெட்டுகள் இயக்கப்பெற்றதால் அது தரையை மெதுவாகத் தொட்டது. அங்குக் கூண்டினை