பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 புறத்திணைக்குப் பொதுவாயினும் அவ்வியலில் பொது மெய்ப்பாட்டை முன்னே கூறிவிட்டுப் பின்னர் ஐந்திணைக் குரிய மெய்ப்பாட்டினைச் சிறப்பாகக் கூறுகின்றார். அது போலவே, உவமை, அகத்திணை புறத்திணைக்குப் பொது வாயினும், சில நூற்பாக்களில் தலைவன் தலைவி செவிலி தோழி முதலியோர் உவமை கூறுவதைப் பற்றியும், அகனைந்திணைக்கே சிறந்த உள்ளுறை உவமையைப் பற்றியும் நூற்பாச் செய்திருப்பதால் அங்கும் ஐந்திணைக் காமத்தையே சிறப்பாகக் கூறுகின்றாரென்பது புலனாகின்றது. செய்யுள் இலக்கணம், அகப்பொருட்பாட்டு புறப்பொருட்பாட்டு என்னும் இரண்டிற்கும், அகப்பொருளில் கைக்கிளை அந்திணை பெருந்திணைகட்குப் பொதுவாயினும், செய்யுளியலில் திணை, கைகோள், கூற்று, கேட்போர் முதலிய ஐந்திணைக் காமச் செய்தியைச் செய்யுட்கு உறுப்பாகக் கூறுவதை நோக்கினால், அங்கும் ஐந்திணைக் காமத்தையே சிறப்பாகக் கருதுகின்றார் என்பது தெரிகின்றது. எனவே அகத்திணை, புறத்திணை என்னும் இரண்டில், அகத்திணை மிக்க பொருளாகிய அகத்திணையியலும் ஐந்தினைக் காமம் மிகச் சிறந்ததென்றும் தொல்காப்பியர் கூற்றிலிருந்தே நமக்குத் தெரிகிறது. காமம் எல்லோருடைய உள்ளத்திலும் இருக்கின்றது. அது பலவகையாக இருக்கின்றது. மண்ணைப் பற்றியும், பெண்ணைப் பற்றியும் பொன்னைப் பற்றியும் மக்கள் விருப்பம் செல்கின்றது. இவையெல்லாம காமந்தான். ஆனால், ஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்புகின்றான். ஒரு பெண் ஒரு ஆணை விரும்புகின்றாள். இதனையே தொல் காப்பியர் அகத்திணை என்று கூறுகின்றார். ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புகின்றான். ஆனால், அப்பெண் தன்னை விரும்பிய ஆணை விரும்புவதில்லை. ஒரு பெண் ஒரு ஆனை விரும்புகின்றான். ஆனால் அவ்வாண் தன்னை விரும்பிய பெண்ணை விரும்புவதில்லை. ஆண் பெண் என்னும் இருவருள் ஒருவர் காமத்தை நுகரும் பருவம் உடையவராயும் மற்றொருவர் காமத்தை விரும்பும்