பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 பொருளைக் கள்வன் களவு செய்கின்றான். சினம், அழுக்காறு, அவா, பொய்ச்சொல், வன்சொல், இழிசொல், தீச்செயல் என்னும் இவற்றிலேயே பழகி, நற்பண்புகளை அறியாதவராகப் பொதுமக்கள் உள்ளனர். இவற்றை யெல்லாம் புலவன் பார்க்கின்றான். இவையெல்லாம் உலகநடை முறையாயிற்றே என்று அவன் கருதிக்கொண்டு இவற்றையெல்லாம் அவன் பாடுவதில்லை. உலகம் தன்னலக் கொள்கையிற் சென்றால் புலவன் "உண்டாலம்ம இவ்வுலகம் தனக்கென வாழாநோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்று பிறர் நலம் விரும்பும் கொள்கையைச் சிறப்பித்துப் பாடுகின்றான். பெரும்பாலும் வாணிபம் செய்வோர் தாம் கொடுக்கும் பண்டத்தை அளவில் குறைத்தும் கலப்படம் செய்தும் கொடுக்கின்றனர். விலைக்கு வாங்குபவரிடம் விலைப் பொருளை மிகுதியாக வாங்குகின்றனர். ஆனால் புலவன் கொள்வது உம் மிகைபடாது கொடுப்பது உம் குறைபடாது' பலபண்டத்தை விலை சொல்லிக் கொடுக்கின்றனர் என்று பாடுகின்றான். காம நெறிப்பட்டு நடக்கும், சிலர் பிறர்தம் மனைவியரை விரும்பிக் கூடுவது தம் ஒழுக்கத்திற்கும் உலக நடைமுறைக்கும் தீங்குதரும் என்று சிறிதளவு கூடக் கருதாமல், இருப்பதைப் புலவன் "எனைத்துணைய ராயினும் என்னாம் திணைத்துணையும் தேரான் பிறனில் புகல்" என்று எதிர்த்துப் பாடுகிறான். இவற்றிலிருந்து தெரிவது என்னவெனில்? "உலக மக்கள் தான் சொல்வதை ஏற்று நடந்தாலும் உலக மக்க ளுக்கு நன்னெறியைப் புகட்டுவது தனது குறிக்கோளென்று புலவன் கருதுகிறான்" என்பது தெரிகின்றது. தொல்காப்பியர் புறத்திணையியலிலும் (16 நூற்பா) கற்பியலிலும் அறிவர் (13 நூற்பா) என்பதைக் கூறுகின்றார். அவருடைய இயல்பைப் புறத்திணையியலில் "மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்"