பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 பொழுது பழைய அந்த மனைவி வெறுக்காமல் ஏற்றுக் கொண்ட பொழுதும், புதல்வனையே ஊடல் தீர்க்கும் வாயிலாகக் கொண்டு தலைவி புகுந்தபொழுதும் தலைமகன் பழைய காலத்தே தலைவிக்கும் தனக்கும் நிகழ்ந்த அன்புடைச் செயல்களையெல்லாம் கருதிப் பெருமையும் உரனும் உள்ள அவன் கலங்குதலையும் செய்வான். பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும் இன்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் இறந்தது நினை.இக் கிழவோன் ஆங்கண் கலங்கலும் உரியன் என்மனார் புலவர் (கற்பியல் 31) தலைமகன் பகைவயிற் பிரிவில் பெண்ணுடன் புணரான் என்பது தலைமகன் போர் காரணமாகப் பிரிந்து பாசறை யிடத்தே தங்கியிருப்பான். அது கூதிர்ப்பாசறை என்றும் வேனிற் பாசறை என்றும் இரண்டு வகையாக இருக்கும். தலைமகன் பாசறையிடத்தே தங்கியிருக்கும்பொழுது தலைவி முதலான பெண்களுடன் புணர்தலைச் செய்யான் என்பதை, எண்ணரும் பாசறைப் பெண்ணொடும புணரார் (தொல். கற்.) என்னும் நூற்பா நுவல்கின்றது. புறத்திணை இயலில் பாசறை நிலைக்கு இளம்பூரணர், கவலை மறுகில் கடுங்கண் மறவர் உவலைசெய் சுறை ஒடுங்கத் - துவலைசெய் கூதிர் நலியவும் உள்ளான் கொடித்தேரான் மூதில் மடவாள் முயக்கு என்ற பாட்டினை மேற்கோள் காட்டியுள்ளார். 1. கூதிர் வேனில் என்றிரு பாசறை காதலின் ஒன்றிக் கண்ணிய நிலையினும் (தொல். புற. 17) புறப்பொருள் வெண்பாமாலை வஞ்சியுள் பாசறை நிலையையும் வாகையுள் கூதிர்ப்பாசறை வாடைப்பாசறை என்னும் இரண்டு பாசறை நிலைகளையும் கூறியுள்ளது.