பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 பொருளால் அண்மந்த உடம்பு உயிர்க்கு இடமாக இருத்தல் போல, பலவகைச் சொல்லால் பொருளுக்கு இடனாக, அறிவினில் வல்லவர் அழகுபெறச் செய்வன செய்யுளாம், என்று மேல் நூற்பா கூறுகின்றது. உலக வழக்காகிய பேச்சு மொழியைப் பேச ஊமையன் நீங்கலாக எல்லா மக்களும் உரியவராவார். ஆனால், செய்யுளைச் செய்ய உணர்வினில் வல்லவர் வேண்டும். அத்தகைய அறிஞர் பல சொற்களைக் கொண்டு செய்யுள் செய்கின்றனர். அவர் உணர்த்த வேண்டும் பொருள்களை அச்செய்யுளில் அமைப்பர். பலவகைச் சொல்லால் பொரு ளுக்கு இடமாகச் செய்யுள் செய்யும் பொழுது அதனை அழகுபடச் செய்வர். எனவே, செய்யுள் செய்வதற்கு அறிவினில் வல்லவரும், பலவகைச் சொற்களும், உணர்த்தும் பொருளும், அழகுபட உணர்த்தும் முறையும் ஆகிய நான்கும் வேண்டுவனவாம். செய்யுள் திறனாய்வு செய்பவர் அல்லது இலக்கியத் திறனாய்வு செய்பவர் ஆக்கியோன், சொல்லமைப்பு, பொருளமைப்பு, உணர்த்தும் முறை ஆகிய நான்கு பாகுபாடு களைச் செய்து கொண்டு திறனாய்வு செய்ய வேண்டும் என்பதை, மேலே காட்டிய நன்னூல் நூற்பா உணர்த்துகிறது. ஆக்கியோன் அல்லது ஆக்குவோன் மேற்கூறிய நான்கு பாகுபாட்டில் முதலாவதாக நிற்கும் ஆக்கியோனைப் பற்றி ஆராய்வோம். நன்னூல் நூற்பா செய்யுளைச் செய்வோனை உணர்வினின் வல்லோன்' என்று குறிப்பிடுகின்றது. இச்சொல் புலமையுடையவனைக் குறிப்பதாகும். தமிழ் நூல்கள் கவி' , கமகன், வாதி, வாக்கி என்னும் நான்கும் புலமைக்கியல்பு எனப் புகலுகின்றது. 1. கவியே கமகன் வாதி வாக்கியென் றிவையொரு நான்கும் புலமைக் கியல்பே (3 - 49) பிங்கலம்