பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அம்பினை வைத்து எய்துபழகும் மக்கள் தங்களுக்கு முன்னால் இலக்கமரம் ஒன்றை நாட்டி இருப்பார்கள். அம்மரத்தில் அசையாக் குறி, அசையும் குறி என்று இரண்டனைப் பொருத்தி வைத்திருப்பார்கள். பயிற்சி பெறுபவர் இலக்கமரத்திலுள்ள அக்குறியை எய்து வீழ்த்த வேண்டும். இருவகைக் குறியைப் பெற்றுள்ள அந்த மரத்திற்கு இலக்கமரம் என்று பெயர். இதனை, "தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ நிலைக்கொரா இலக்கம் போன்றன" (4) என்னும் புறநானூற்றுப் பாடற்பகுதியை நோக்கி உணரலாம். இலக்கு அம் இலக்கம் என்றாயிற்று. கொங்கு நாட்டு மக்கள் (விசயமங்கலம் பகுதி) இலக்கு என்னும் இன்சொல்லை இகரத்தை நீக்கி லக்கு என்றும் லகரத்தைத் திரித்து இலக்கு என்றும் வழங்கி வருகின்றனர். நான் இந்த இலக்கிலே வந்தேன். இந்த இலக்கிலே தேடிப்பார் என்றெல்லாம் அவர்கள் வழங்கி வருகின்றனர். இலக்கம் குறியினையுடைய மரம். இலக்கியம் குறிக்கோ ளுடையது. இலக்கியம் என்னும் சொல்லிற்கு உதாரணம் என்றும் பொருளுண்டு. இதிகாசம் இலக்கியம் எடுத்துக்காட்டல் உதாரணம் எனவும் உரைக்கப் படுமே என்று கூறும் பிங்கல நிகண்டு. உலக நடைமுறையில் எல்லாச் செயலுக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. இலக்கியம் எழுதுபவனுக்கும் குறிக்கோள் உண்டு. சிலப்பதிகாரம் "அரசியல் பிழைத்தோர் அறங்கூற்றாவது உம், உரைசால் பத்தினிக் குயர்ந் தோரேத்தலும், ஊழ்வினை உருத்துவந் தூட்டு மென்பது உம்" என்னும் மூன்று குறிக்கோளைக் கருதி இயற்றப்பட்டதாக அதன் பதிகம் கூறுகின்றது. தன் கருத்தைப் பிறர்க்கு அறிவுறுத்தல் என்ற குறிக்கோளுடன் சொல் தோன்றிற்று. முன்னே ஓரெழுத் தொருமொழி ஈரெழுத்தொரு மொழிகளும் பின்னர் தொட