பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 F அடிகளால் வந்துள்ளது. ஆசிரியப்பாவை ஆயிரம் அடிவரை பாடலாம் என்பது செய்யுளியல் விதியாகும். பரிபாடல் கலிப்பா முதலியனவெல்லாம் பலவிதமான உறுப்புக்களைப் பெற்று வருகின்ற பெரிய பாடல்களாகும். எடுத்துக்கொண்ட செய்தி சிறியதாயின் சிறிய பாடலாலும், பெரிதாயின் பெரிய பாடலாலும் பாடிவிடலாம். ஆதலின், பாடுகின்ற வனுடைய பொருள் விரிவிற்கு அடிவிரிவால் தனிப் பாடல்களே இடந்தந்து வந்தன. பழங்காலத்திலே வாய்மொழிப் பாடல்கள் பல்வேறு வடிவத்தில் வழங்கிவந்தன என்பதைச் சங்க இலக்கியங் கொண்டு அறிதல் கூடும். "அகவன் மகளே அகவன் மகளே மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே" (குறுந்தொகை 23) இங்கே அகவன் மகள் என்றது கட்டுவிச்சியை. அவர் பாடுகின்ற வாய்மொழிப் பாட்டு மலையைச் சிறப்பித்துக் கூறுகிறது. "அகவினம் பாடுவாம் தோழி" (40) என்னும் கலித்தொகைப் பாடலால் குறிக்கப்படுவது தோழியும் தலைவியும் பாடும் வள்ளைப் பாட்டாகும். இலக்கண நூலின் விரிபெறாமல் முற்காலத்தெழுந்த வாய்மொழி இலக்கியத்தை இயற்கை இலக்கியம் என்று கூறலாம். வாய்மொழி இலக்கியத்தின் போன்மை கருதி, ஆனால், இலக்கண நூலின் விதிபெறாமல் முதன்முதல் எழுதப்பட்ட எழுதும் இலக்கியத்தையும் இயற்கை இலக்கிய மென்றே கூறலாம். முற்காலச் சான்றோர் மேலே கூறிய இருவகை இலக் கியத்தையும் ஆராய்ந்து இலக்கணம் எழுதத் தொடங்கினர்.