பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 அன்றியே காதலன் இறப்பக் காதலி புலம்புவள் தொழில்செயச் சென்றோன் தொழில்முடியாமல் மாதரை எண்ணி மனம்மிக மறுகுவன் அங்கண் இல்லினுள் இல்லாள் இரங்கி அரற்றுவள் தீதுதீர் மனைவியைக் காணவும் விரும்பான் தீர்ந்து விலகித் துறந்து நிற்பன் தீர்ந்துநின் றவனைத் தெரியிழை நல்லாள் தெரிவுறக் கிட்டிப் பழிபல உரைப்பாள் கணவன் இறக்க காதலி வருந்தி கைம்மை நோற்றுக் கையற வடைவாள் காதலி இறக்கக் காதலன் வருந்தி வேறுமனந் தன்னை விரும்பா திருப்பான் கணவன் இருக்க அவனை விட்டே வேற்றான் ஒருவனுடன் விரும்பி வாழ்வாள் கணவன் இறக்கத் தாலியை நீத்து வேற்றான் ஒருவனை விரும்பி மணப்பாள் காதலி இறக்கக் கையறல் நீக்கி வேறொரு மாதரை விளங்க மனப்பன் முத்த தலைவன் இளையளை மணப்பன் இவற்றினைப் போல எழுந்திடு கின்ற - பொருந்தாக் காமம் பலவும் பெருந்திணை புறத்திணை நடையினைப் பொருந்துற விரிப்பின் பகைவர்தம் பொருளைப் போர்தொடங் கற்காக் களவினிற் கொள்ளும் கால்கோள் வெட்சியும் பகைவர்மண் பற்றும் பாங்குடை வஞ்சியும் பகைவர்வா ழிடத்தை முற்றுகை யிட்டுப் பகைவரை அழிக்கும் பாங்குடை உழிஞையும் பகைவர் ஆற்றலை அழித்திடு தும்பையும் கூறிய இவற்றில் வெற்றிகொள் கின்ற மறக்கூ றான வாகையின் வகையும் உலகில் வாழும் ஒவ்வொரு மக்களும்