பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 பேராசிரியர் கருத்தினையே விளக்கி நோக்கிப் பயன் கோடலையுடையவாகச் செய்யும் கருவி என்றனர். இங்கே நோக்கி என்பது மனத்தால் நோக்குதல் 燃一" மருங்கின்' என்னும் நூற்பாவுரையில் வான் நாக்கி வாழும் உயிரெல்லாம் என்றவிடத்து வானை நோக்கி வாழும் என இரண்டாம் வேற்றுமையும் விரிக்க லாம். ஏதுப்பொருள் வைத்து வானால் நோக்கி வாழும் வானின் நோக்கி வாழும் என மூன்றாம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும் விரிக்கலாம். ஏதுவாயினவாறு என்னை எனின் உயிர் வானை நோக்குவது, வானத்தினால் விளையும் பயன்பற்றி அப்பயனை இன்றியமையாமையன்றே அவ்வின்றியமையாமைக்கு வான் ஏதுவாதலும் உடைத்து, என்பர். அதுபோல் மாத்திரையை எழுத்தை அசையை சிரை அடிநிலையை ஆகிய அவற்றை அவற்றால் விளையும் பயன் கருதி நோக்குதல் நோக்கு என்க. இளம்பூரணர் கருதுகிறவாறு பொருள் முடிவு கருதியோ நோக்குதலே நோக்காயின் அக்கருத்திற்கு மாத்திரை முதலானவற்றை யெல்லாம் குறித்துக் கூறவேண்டியதில்லை. பேராசிரியர் கருதுகிறவாறு, நான்கு சொற்களை வழக்கியல்பினவாகி வெள்ளையமையாற்றொடுக்காது கேட்டார் மறித்து நோக்கிப் பயன்கொள்ளுமாறு கூறப்படுவது என்று கொள்ளின் சொல்லைச் சுட்டுகின்றாற் போற் கூறின் அமையுமே இதற்கு மாத்திரை முதலானவற்றை யெல்லாம் குறித்துக் கூறல் வேண்டுமா? மாறனலங்காரம் என்னும் அணி இலக்கண நூல் பேராசிரியர் உரைக் கருத்தினைத் தழுவி இவ்வாறு கூறுவது பரிகரம் என்னும் அலங்காரம் என்று கூறி இதற்கு நுட்பம் என்று பெயர் உண்டு. இது நோக்கு என்னும் யாப்புக்கால் ஆகும் என்றும் காரணம் விட்டு நீங்காத நிலைமொழியில் உண்டாகிய ஐயத்தின் காரியம் விட்டு நீங்காது வருமொழி அதற்கு உரிமை யெய்தப் பாதுகாக்குந் திடமுடையது எனச் சொல்பற்றியே ஒதுவர். அவர் கூறும் விளக்கம் " நோக்கென்பது மாத்திரை முதலாக நிரம்பும் அடிகளாலாய தொடையுடையவாஞ் செய்யுள் நடந்தவடி எத்துணைய வாயினும் அவை முடியுங் காறும் வெள்ளை மையும் பிள்ளைமையுமின்றி வந்த வாக்கியம் கேட்டோர்