பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 குழந்தை விளையாட்டும் கற்பனையும் சிறு குழந்தையொன்று விளையாடத் தொடங்கு கின்றது. தெருவிலே சென்று மணலால் சிறுவிடு கட்டிக் கொள்கின்றது. அதனை உண்மையான வீடென்றே கற்பனை செய்து கொள்கின்றது. தனக்குக் கிடைக்கின்ற கிளிஞ்சில் சிறுகல் என்னும் இவற்றையெல்லாம் பொறுக்கி வைத்துக் கொண்டு அவற்றைக் காசுகள் என்று கற்பனை செய்து கொண்டு மிக மகிழ்ச்சியாக விளையாடுகிறது. அது பற்றிய பாடலைக் கீழே காண்க: பாப்பா செய்யும் காரியங்கள் பார்க்கப் பலர்க்கும் வியப்பாகும் கேட்பா ரற்றுக் கிடக்கின்ற கிளிஞ்சிலைக் கல்லைப் பொறுக்கிக் கொள்ளும் - 1 காசுக ளென்றே கூறிக்கொள்ளும் கருத்தாய்க் கொடுத்து வாங்கிக் கொள்ளும் துசினைப் போல சிலர்நினைந்து தொட்டால் அவரைக் கடிந்து கொள்ளும் - 2 ஒன்றை ஒன்றாய்க் கற்பித்தல் உயர்ந்த புலவன் கருத்தென்பர் என்றும் அந்தக் கற்பனையை இயற்றி மகிழும் குழந்தையினம் - 3 கம்பர் கூறும் அவையடக்கம் கற்பனை நிறைந்த பெருங்காப்பியம் கம்பராமாயணம். அக் காப்பியத்தின் தொடக்கத்திலே கம்பர் அவையடக்கம் கூறுகின்றார். சிறு குழந்தைகள் விளையாடி மகிழ்வதைக் கருதி கற்பனையின் அடிப்படையில் நிலத்திலே வீட்டினைப் போலக் கோடு கிழித்துக் கொண்டு விளையாடுகின்றன. அதனைக் கண்ட தச்சர் அக்குழந்தைகள் கற்பனை உணர் வுடன் விளையாடுதலைப் பார்த்து மகிழ்வரேயன்றிச் சினப்பரோ? அதனைப் போல என் கவியைப் பார்த்துப் பேரறிஞர் முனிய மாட்டார்கள் என்று கூறுகின்றார்.