பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பிரிவேன் என்று நீ ஐயப்படுகிறாய்? இவற்றிற்கெல்லாம் மேலாக என் காதல் தானும் கடலினும் பெரிதாக உள்ளது. (166) இப்பாட்டில் குழந்தை விளையாட்டிற்குப் 'பொய்தல் என்று ஒரு பெயர் இருத்தலை உணர்க.பொய்தல் என்பதும் கற்பனை என்பதும் ஒன்றே. கற்பனையில் வாழ்பவர் ஒருபொருளை மற்றொரு பொருளாகக் கருதுவது கற்பனை. அது சங்கரர் பரப்பிய அத்துவித மதத்திற்கு அடிப்படையானது. குழந்தைகளும் ஒரு பொருளைத் தாங்கள் விரும்பிய மற்றொரு பொருளாகக் கற்பனை செய்து கொண்டு விளையாடி மகிழ்கின்றன. புலவனும் தன் கவிதை விளையாட்டில் ஒரு பொருளைத் தனக்கு வேண்டிய மற்றொரு பொருளாகக் கற்பனை செய்து விளையாடுகிறான். கற்பனை என்பது வடசொல்லா தமிழ்ச் சொல்லா? ஒன்றை மற்றொன்றாகக் கருதும் திரிபுணர்ச்சியை உணர்த்தும் கற்பனா என்ற சொல்லை வடமொழியாகக் கருதல் வேண்டும். கற்பு, கற்பித்தல் என்று வரும் சொற் களெல்லாம் தமிழ்ச் சொற்களே. கற்பனை என்ற சொல்லிற்குப் புனைந்துரை என்பதைப் பொருளாகக் கூறுகின்றனர். இப் பொருளில் வரும் கற்பனைதான் புலவன் கருதிய கற்பனையாகும். பாரதியார் குயிற்பாட்டின் ஈற்றில், சோலைக் குயில் காதல் சொன்னகதை யத்தனையும் மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையுன் சூழ்ச்சியென்றே கண்டுகொண்டேன் குயிற்பாட்டுக்கதை மாலை அழகின் மயக்கத்தால் மனத்தில் தோன்றிய கற்பனை என்று குறிக்கின்றார். எனவே, புலவன் மேற்கொள்ளும் கற்பனை என்பது, இயற்கை அழகிலும், உலகியல் நிகழ்விலும் ஈடுபட்ட புலவனின் பல்நெறிப் புனைந் துரையாகும். ஆனால் புனைந்துரை என்ற பொருளில் வரும் கற்பனை என்ற சொல் பழைய தமிழிலக்கியங்களில் வழங்கவில்லை. அங்ங்னமானால் பழந்தமிழ்ப் புலவர் கற்பனையை அறியாதவரோ எனின்? சங்கப் புலவர் தம்