பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 வென்றும், அக்கண் நீங்கிச் சத்துசித்து ஆனந்த மயமான பிரமமாகப் பார்ப்பது உண்மை அறிவாகையால் இது வீடுபேறு பெறுவதற்கு ஏது என்றும் அத்துவித மதத்தவர் கூறுகின்றனர். அவர்தம் கருத்துப்படி கற்பனை உணர்வால் உலக பந்தம் ஏற்படுகிறது. சிறு குழந்தைகள் ஒரு பொருளைத் தங்கட்கு வேண்டிய மற்றொரு பொருளாகக் கற்பனை செய்து விளையாடுவதால் அவர்கட்கு அளவற்ற மகிழ்ச்சி பிறக்கிறது. பேரறிவு படைத்த புலவன் ஒருவன் இயற்கை அழகிலும் உலகியல் நிகழ்ச்சிகளிலும் உள்ளத்தை நிறுத்தி உணர்ந்து கவிதையைக் கற்பனை நலம் மிக்கு விளங்கப் பாடுவதால் அதனைப் படிக்கும் மக்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டாகின்றது. தொல்காப்பியர் கூறும் நாடக வழக்காகிய கற்பனை எந்த நிகழ்ச்சியும் ஓர் இடம் பற்றிக் காலம் பற்றி அவற்றில் தோன்றிய பொருளில் நிகழ்ச்சிக்கு வேண்டும் பொருள்களைத் துணையாகப் பெற்று அது நிகழும் என்பது உலகியல் முறையாகும். ஆனால் மேற்கூறிய இடத்தையும் காலத்தையும் அவற்றில் தோன்றிய கருப் பொருள்களையும் ஐந்துதினைக்குரியனவாகக் கற்பித்துக் கொண்டது கற்பனையாகும். ஒருதலைக் காமமாகிய கைக்கிளையும் பொருந்தாக் காமமாகிய பெருந்திணையும் உலகில் மிகுதியாக நடை பெறுகின்றது. ஒத்த காமமாகிய ஐந்தினை உலகில் மிகுதியாக நடைபெறுவதில்லை. தொல்காப்பியர் கைக்கிளை பெருந் திணைகளைச் சில நூற்பாக்களால் கூறிவிட்டு அன்பின் ஐந்திணையைத்தான் மிக விரித்துக் கூறுகிறார். அன்பின் ஐந்திணையைப் பாடுவதற்குப் பரிபாடலும் கலியும் சிறந்தன என்று அமைத்துக்கொள்கிறார். இவையெல்லாம் புலவனால் நாட்டிக் கொள்ளப்பட்ட நாடக வழக்குத்தானே.