பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291 யாரையும் யான் பெற்றேனில்லை. ஆகையால் நீயே சென்று என் துன்பத்தைத் தலைவனுக்கு எடுத்துச் சொல் என்று கூறுகின்றாள். இப்புனைந்துரை வரிகளால் தலைவியின் உள்ளம் தெளிவற்றிருப்பதனை உணர்கிறோம். அவரவர் உறுபிணி தமபோற் கூறுதல் பாய்திரை பாடோவாப் பரப்பநீர்ப் பனிக்கடல் தூவறத் துறந்தனன் துரிறவருனன் றவன்நாம நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போல காதல்செய் தகன்றாரை உடையையோ நீ ப்ெபாட்டு கடல் உற்ற பிணியைத் தம் பிணிக்கு வருந்தின வாகச் சேர்த்தி உயர்திணையாக்கி உவம வாயிற்படுத்தது. அறிவும் புலனும் வேறுபட நிறுத்தி உவம வாயிற்படுத்திக் கூறல் ஒங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லும் காந்தட் சிவரும் கருவிளம் பூக்கொண்டும் மாந்தளிர்க் கையில் தடவரும் மாமயில் பூம்பொழில் நோக்கிப் புகுவன பின்செல்லுத் தோளெனச் சென்று துளங்கொளிவேய் தொடும் நீங்கதுப் பிஃதெவு நீரறல் உட்புகும் வாளொளி முல்லை முகையை முறுவலென்று ஆள்வலி மிக்கான் அஃதறி கல்லான் இவை, இடையும் கையும் கண்ணும் மேனியும் சாயலும் தோளும் கதுப்பும் முறுவலும் ஆகிய தலைவி உறுப்புக் களைப் பற்றிய உவம வாயிற்படுத்தறியும் அறிவையும், அறியப்படும் (புலன்) பொருளையும் வேறுபட நிறுத்தி உவமம் பொருந்திய வழிக் கூறியவாறு உணர்க. வேயைத் தோள் போலும் என்று உவம வாய்பாடாகக் கருதாது உருவகம்படத் தோளென்றே தொட்டமையால் அறியப்படும் பொருள் வேறுபட்டது. அதனைத் தியக் காண்டலால் அறிவு வேறுபட்டது. பித்தும் களியும் போல, முலையெனச் சென்று வேயைத் தொடும் என்னாது, தோளெனச் சென்று