பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 அவையாகும்.இங்ங்னம் வரும் பல்வகை அவைகளுள் ஒன்றாக எட்டுவகை நுதலிய அவையும் என்னும் ஒன்றைத் தொல்காப்பியர் கூறுகின்றார். இவ்வகையார் நற்குடியிற் பிறந்தவர் நன்கு கற்றவர் நல்லொழுக்கம் வாய்மை துய்மை நடுவுநிலைமை என்னும் உயர்ந்த பண்புகளை உடையவர் பொறாமைப்படாதவர் அவா இல்லாதவர். இவரை, குடிப் பிறப் புகுத்தும் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காதலின் பத்துள் தங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்காறு இன்மை அவா வின்மையென இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை என்று ஆசிரியமாலை என்ற நூல் சிறப்பிக்கின்றது. இந்த அவைக்கு அறங்கூறவை அறனிலை திரியா அவை எனவும் பெயர் கூறப்படும். நாட்டிலே மக்களுக்கு நியாயம் வழங்கக் கூடியது இது. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அறனிலை திரியா அன்பின் அவையத்துத் திறனில் லொருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தே னாகுக என்று வஞ்சினங் கூறியுள்ளான். இப்பாடலை நோக்கினால் அந்த அவையின் சிறப்புப் புலனாகின்றது. இந்த அவை அரசியல் ஆதரவுடன் வளர்ந்து வந்தது. அரசர் தம் செங்கோல் வளர்வதற்கு ஏதுவாயிருந்தது என்பதனை மேற்கூறிய புறநானூற்றுப் பாடலாலும், கருங்கழல் வெண்குடையான் காவல் விரும்பான் ஒருநாள் மடியின் உலகின்மேல் நில்லா இருநாள் வகையால் இயல்பு = 22 என்னும் பாடலாலும் அறிதல் கூடும். எனவே வாகைத் திணையில் வந்துள்ள எட்டுவகை நுதலிய அவையம் நாட்டிலே நன்னெறி நடப்பதற்கு ஏதுவாக உள்ளது என்பதை