பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

403 சமுதாயத்தை குறிப்பிட்டு விட்டு அந்தணர் முதலான நால்வரையும் ஏவல் மரபில் ஏனோர் (பிறரை ஏவிக்கொள்ளும் மரபின் ஏனோர்) என்று குறிப்பதால் வேளாளருக்கு மற்ற மூவருக்கும் பணி செய்யும் தொழில் உண்டு என்று கூறுதல் ஆரியச் சார்பால் நிகழ்ந்ததாகும். இந்த வாகைத்தினை கூதிர்ப்பாசறை முதலாக பதினெட்டுத் துறைகளை உடையது என்பதனை அடுத்து நூற்பாவில் விளக்குகின்றார். வாகைத்திணையை அடுத்துக் காஞ்சித் திணையை விளக்குகின்றார் ஆசிரியர். இக்காஞ்சித்திணை பெருந் திணைக்குப் புறனானது. இது நிலைமையாமையைப் பற்றி பேசும் பாங்கினது. இதனை, 'காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே' என்ற நூற்பாவால் தொல்காப்பியன்ார் விளக்குகின்றார். இது இரண்டு பகுப்பாக ஒதப்பட்டுள்ளது. உண்மைப் பொருள் உணர்வார்க்கு நிலையாமை உணர்ச்சி உறுதி பயக்கும் ஆதலின் பாங்கரும் சிறப்பினை உடையது என்பர். புறப் பொருள் வெண்பாமாலை முற்றிலும் மாறுபட்ட நிலையில் காஞ்சித்திணையினை விளக்குகின்றது. அதாவது மண்கருதி வஞ்சி சூடி வந்த மன்னனுடன் மண்ணைக் காத்தலுக் குரியவன் காஞ்சி என்றும் மலர்சூடிப் போர் புரிவதனை குறிப்பிடுகின்றது. இது பன்னிருபடல நெறி e?!©LD. இறுதியாக விளக்கத்திற்கு அமைவது பாடாண் திணை. இது கைக்கிளைக்குப் புறனான திணையாகும்.இது எட்டு வகையினை உடைத்து. இதனை 'பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே' என்ற நூற்பா விளக்கி நிற்கிறது. இவ்வியலில் தெய் வத்தையும், தெய்வத்தை ஒத்தாரையும் மக்களையும் பல்வகை நெறியில் பாடும் முறை கூறப்பட்டுள்ளது.