பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 வஞ்சிதானே முல்லையது புறனே என்ற நூற்பாவிற்கு இயைய முல்லைப்பாட்டு அமைந்திருக்கும் பான்மை தோ ற்றுவாய் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் தம் தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் அகப்பொருட்குரிய திணைகளை, கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த கிளந்த எழுதிணை என்ப - தொல்,அகம்1. என ஏழு திணைகளைக் கூறுகின்றார். கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஏழு திணைகளுக்கும் புறனான பாடாண், வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்ற புறத்திணைகள் ஏழனைப் பிற்படப் புறத்திணை இயலில் கூறுகின்றார். பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே தொல், புறம், 10 | வெட்சி தானே குறிஞ்சியது புறனே தொல்.புறம் 1 வஞ்சி தானே முல்லையது புறனே = தொல், புறம். 6 உழிஞை தானே மருதத்துப் புறனே - தொல், புறம் 8. வாகை தானே பாலையது புறனே தொல். புறம் 15. காஞ்சி தானே பெருந்தினைப் புறனே - தொல். புறம் 18. இத்தொல்காப்பிய நூற்பாக்கள் ஏழனுள் 'வஞ்சிதானே முல்லையது புறனே' என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாக ஆலப்பாட்டு அமைந்த திறத்தைக் காண்பதே இக்கட்டுரை.