பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 முன்பும் புலன் என்ற இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பது தெரிகின்றது. புலனெறி வழக்கிற்கு உறுப்பு "நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்" (அகத்திணையியல் 56) என்ற தொல்காப்பிய நூற்பாவின்படி, புலனெறி வழக்கிற்கு நாடக வழக்கும் உலகியல் வழக்கும் உறுப்பாகும். இங்கே நாடக வழக்கென்பது: "சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத்தாலும் குலத்தாலும் ஒழுக்கத்தாலும் அன்பினாலும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும் அவ்வழிக் கொடுப்போருமின்றி அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும்; பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கணவகையினால் வரைந் தெப்தினார் எனவும் பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல். உலகியல் வழக்கமாவது: உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது என்பர் இளம்பூரணர். புலனெறி வழக்கம் என்பது, அகப்பொருள் பற்றியதா? புறப்பொருள் பற்றியதா? 'புலவர் ஆறு (செய்யுளியல் 94) என்றாற்போல, புலனெறி வழக்கம்' என்றாதல் புலனெறி' என்றும் சொல் பொதுவாக உள்ளது. புலனெறி வழக்கம்' என்றாலும் அச்சொல் பொதுவாகக் கருதப்பட்டு அகத் திணை புறத்தினைப் பொருள்களில் வரலாம். ஏன் எனில்? அகத்தினைப் பொருளும் புலனெறி வழக்கிற்குரியது: புறத்தினைப் பொருளும் புலனெறி வழக்கிற்குரியதுதான். புலனெறி வழக்கினைக் குறிப்பிடும் நாடக வழக்கினும் _ற நூற்பா அகத்தினையியலில் வந்திருப்பது கொண்டு புலனெறி வழக்கம் என்பது அகத்திணைக்கே உரியதென்று கொள்வது பொருத்தமாக இல்லை. நாடக வழக்கினும், ம வலியஸ் வழக்கினும் பாடப்படும் புலனெறி வழக்கம் _கப்பொருள் பற்றி வருமேயானால் கலிப்பாவாலும்