பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 யொன்று உண்டு) இவ்விரண்டு வகையுமின்றிவரும் ஒசை செய்யுள்" என்று வேறுபாடு கூறியுள்ளனர் இளம்பூரணர். மேலே கூறிய நான்கில் பாட்டிடை வைத்த குறிப் பென்பது "ஊர்க்கால் நிவந்த" என்னும் குறிஞ்சிக் கலிப்பாட்டுள்'இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து" என்றது உரைக்குறிப்பு. சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவையுள் "கயலெழுதிய இமய நெற்றியின் அயலெழுதிய புலியும் வில்லும் நாவலந்தண் பொழின்மன்னர் ஏவல் கேட்பப் பாரரசாண்ட மாலைவெண்குடைப் பாண்டியன் கோயிலுள் காலை முரசும் கனைகுரலியம்புமாதலின் நெய்ம் முறை நமக் கின்றாகுமென ஐயைதன் மகளைக்கூய்க் கடைகயிறும் மத்துங்கொண் டிடைமுதுமகள் வந்துதோன்றுமன்" என்றதும் அது" என்றனர் இளம்பூரணர். இளம்பூரணர் பாட்டிடை வைத்த குறிப்பு என்பதற்கு மேலே இரண்டுவகையான உதாரணத்தைக் காட்டியுள்ளார். அவ்விரண்டில் ஒன்று, பாவினிடையே வந்தும் பாக்களுக் குரிய ஓசையைப் பெறாமல் பாட்டின் பொருட்குறிப்பை உணர்த்தும் உரைத்தொடராய் வருவதாகும். மற்றொன்றுக்கு அவர்காட்டிய உதாரணம் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையுள் 'கயலெழுதிய' என்று தொடங்கும் உரை _னும் செய்யுளாம். இது வாய்மொழியிலக்கியம் பலவகை வடிவில் இயங்குகிறது. இவ்வகையில் ஒன்று பெண்கள் படும் ஒப்பாரிச் செய்யுள். அச்செய்யுளை அவர்கள் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். ஒன்று அழுதற்காகப் படுவது மற்றொன்று மார்பில் அடித்துக் கொள்வதற்காகப் படுவது. இப்பாட்டு இரண்டு சீராலான வஞ்சிப்பாட்டைப் போல வரும். இது தாள அமைப்பை உடையது. பெண்கள்