பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 காப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பில் துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப இறைத்தோறும் ஊறும் கிணறு (378) _றும் பழமொழிப் பாடலை நோக்குக. இதில் இறைத் தோறும் ஊறும் கிணறு என்பது பழமொழி. மந்திரம் தொல்காப்பியர் மந்திரத்தை வாய்மொழி என்று செய் 75) குறிப்பிடுகின்றார். ஏட்டிலே எழுதி வைக்கப் பெறாமல் வாய்வழியாகவே வழங்கிவருதலான் மந்திரத்தை வாய்மொழி என்றே கூறுவர். இதனை அவர் பின்னர் 'மறைமொழி கிளந்த மந்திரம் என்று கூறி, இது அடி வரையறையில்லாமல் வரும் என்பர். இதனைச் சொல் லதிகாரத்தே 'மந்திரப் பொருள்வயின’ ஆகுநவம் (எச். 33) என்று கூறியுள்ளார். இந்நூற்பா வுரையுள் சேனாவரையர் மந்திரப் பொருட்கண் அப்பொருட்குரித்தல்லாச் சொல் வருவனவும் என்று கூறி இதற்குதாரணம் மந்திர நூல் வல்லார் வாய்க்கேட்டுணர்க என்றனர், ஆனால் இளம்பூரணர், 'திரிதிரி சுவாகா கன்றுகொண்டு கறவையும் வர்த்திக்கச் சுவாகா' என்றனர். இது கறவைப்பசு பால் கறக்கவிடாமலும் _றினை ஊட்டுவதற்கு விடாமலும் இருக்கும்பொழுது மந்திரிப்பவன் கூறும் மந்திரமாகும். கன்று ஊட்டுதல் கொள்ளவும் கறக்கும் பால் பெருகவும் வேண்டுமென்று மlதிரம் வல்லவன் கருதுகிறான். இம்மந்திரச் செய்யுள் லெக்கணத்தை நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும் மறைமொழி தானே மந்திரம் என்ப _று தொல்காப்பியம் கூறுகின்றது. மந்திரமாகிய செய்யுளை செய்வதற்கு உரிய ஆசிரியர் நிறைமொழி மாந்த ாவார். நிறைமொழி மாந்தராவார் யார் என்னின்? அருளிக் _றிலும் வெகுண்டு கூறினும் அவ்வச் சொற்களின் பொருண்மை யாண்டும் என்றும் குறையின்றி நின்று அவ்வப்