பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 உன் போர்வீரர்கள் பகைவர் நாட்டகத்தே சென்று ஈட்டிவரும் மலைபோன்ற நிதிக் குவியலை உன்முன் நோக்கி வரும் இரவலர்க்கு உபகாரம் செய்யாதே. உன் போர்வீர்கள் பகைவர் நாட்டகத்தே சென்று ஈட்டிவரும் மலைபோன்ற நிதிக் குவியலை உன்முன் கொண்டுவந்து காட்டும் அமைச்சர்களைத் தக்கவர் என்று தெளியற்க. ஒருவர் ஈட்டி வைத்திருக்கும் பொருளை முறையின்றிக் கவராதே. குடிமக்கள் ஈட்டி வைத்துள்ள பொன்னாகிய பெரும்பொருளைப் பெறவேண்டும் என்ற ஆசையால் சென்ற அவர் சோற்றுப்பானையினையே அவர் வருந்த நீ தோண்டி எடுக்காதே. மக்கள் அறப்புறமாகத் தந்துள்ள வீடு நிலம் முதலிய பொருள்களை நீ ஆசைப் பட்டு அடைய விரும்பாதே அறத்தோடு கூடிய அவையினரது வளைந்த நாவைத் திருத்தி துன்பம் ஆகுமாறு நட்டவர் வாழ்வைச் சிதையாதே பகைவரிடத்தே கடுஞ்சொல் உடையவனாய் கற்றார்க்கு இனன் ஆகி கல்லாதாரை நீக்கி ஒழுகி பகைவரை அழித்து உன்னைச் சேர்ந்தவரை வாழ்ந்திடச் செய் சுற்றத்தை அறிந்த அறிவினனாகி மற்றும் இவை போன்றவற்றைக் கொண்டொழுகின் நிலமகள் உன் ஒருகுடை நிழலிலேயே தங்குவள். இவ்வாறு நாட்டிற்கு உயிரென அரசனுக்கு அரசியல் முறைகளை அவன் செவிக்கு மட்டும் கேட்குமாறு உணர்த்து வதால் செவிஅறிவுறுஉ அல்லது செவியுறை என்னும் பெயருடன் பண்டு வழங்கியிருந்தது.