பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இனிப் புறமாவது, வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை என்றான் சித்திர மேழும் புறனென மொழிப வெட்சி முதலாத் தும்பை யீறாச் செப்பிய ஏழும் புறப்பொரு ளாகும் எனக் கொள்க. வெட்சி ஆ கவர்தலானும், கரந்தை உட்குவரச்சென்று விடுத்தலானும், "வெட்சியும் கரந்தையும் தம்முள் மாறே" என்பது பன்னிருபடலம். வஞ்சி மேற்செல்லலானும், காஞ்சி அதனெதிர் அஞ்சாது எதிர் சென்று ஊன்றலானும் "வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே" என்பது பன்னிருபடலம். உழிஞை ஆரெயில் முற்றலானும் நொச்சி விழுமிதின் அவிவெயிற் காத்தலானும் "உழிஞையும் நொச்சியும் தம்முள் மாறே" என்பது பன்னிருபடலம். பொருதல் தும்பை புணர்வ தென்ப இவற்றின் விகற்பமெல்லாம் பன்னிருபடலத்துட் காண்க. புறப்புறமாவன வாகையும் பாடாண்பாட்டும் பொதுவியற் றிணையும் எனக் கொள்க. என்னை? வாகை பாடாண் பொதுவியற்றிணையெனப் போகிய மூன்றும் புறப்புறப் பொருளே என்றார் தொல்காப்பிய அகத்தியமுடையார். மதுவிரி வாகையும் பாடாண் பாட்டும் பொதுவியற்படலமும் புறமா கும்மே என்றார் வாய்ப்பியனார். இவை ஆமாறு வெண்பாமாலையுள்ளும், பன்னிரு படலத்தினுள்ளும் காண்க என்பர். மேற்குறிப்பிட்ட யாப்பருங்கல விருத்தி உரையினால் தெரிவன. பொருள் என்னும் திணை அகம் அகப்புறம், புறம் புறப்புறம் என்று நான்கு பகுப்பின என்பதும்