பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பன்னிருபடலத்துள் வெட்சித்தினை தொல்காப்பியர் கூறியதன்று பன்னிரண்டு புலவர் பகர்ந்த பன்னிருபடலத்துள், வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றினார் என்று கூறுகின்றனர். இதனை இளம்பூரணர் மறுக்கின்றார். அவர் மறுப்பு: தொல்காப்பியர் தொல்காப்பியத்தின் புறத்திணை யியலில் வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலத்திலே சென்று களவினால் ஆக்களைத் தந்து ஒம்புதல் வெட்சித்தினை யாகும் என்று கூறுகின்றார் (புறத்திணையியல் -2) ஆனால், தொல்காப்பியர் இயற்றியதாகக் கூறப்படும் பன்னிரு படலமானது தொல்காப்பியத்தில் கூறிய கருத்திற்கு மாறாக "தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று அன்ன இருவகைத்தே வெட்சி" என்று வெட்சியை இரண்டு பிரிவாகக் கூறுகின்றது. இதன்பின் வருகின்ற வஞ்சித் திணையாகிய எடுத்துச் செலவும் உழைஞைத் தினையாகிய எயில்காத்தலும் தும்பைத் தினையாகிய மைந்துகருதி போர் செய்தலும் தன்னுறு தொழிலாய் வராமல் மன்னுறு தொழிலாய் (அரசர்மேல் இயன்று) வருதலின் வெட்சியில் மட்டும் தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர்நாட்டும் களவின் ஆனிரை கோடலின் இவ்வாறுசெய்யும் இவர் அரசருடைய ஆணையை நீங்கினார் ஆவராதலால் (தொல் காப்பியர் அவர் பன்னிருபடலத்தே அவ்வாறு கூறினா ரென்பது மிகைபடக் கூறியதாகக் கருதவேண்டி வரும். அதனால் பன்னிருபடலத்தே வெட்சிப் படலத்தைத் தொல் காப்பியர் கூறினார் என்றல் பொருந்தாதென்பர். (புறத்திணையியல் - சூ.2) பன்னிருபடலத்துள் கரந்தைக்கண் புண்னொடு வருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினாராகலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின், அஃது இவர்க்கு மாறாகக் கூறுதலும், மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றக் கூறலும் மிகைபடக் _றலும் ஆயவாறு எடுத்துக்காட்டின் பெருகும் என்க (தொல், புறத்திணை.5) என்பர்.