பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 4. யாழோர் கூட்டம் மட்டும் (காந்தர்வ மணம்) அகமாயின் பிரமம் முதலிய ஏழும் புறமாகல் வேண்டும். 5. கைக்கிளை பெருந்தினையைப் புறம் என்றால், கலித் தொகை முதலிய சான்றோர் செய்யுள் நெறிக்குப் பொருந்தாது. 6. பன்னிருபடலம் பொதுவியல் என்று கூறுவது ஏழ் திணைக்கும் பொதுவாதலின் அதனை போர்த் தொடக்க மாகிய வெட்சிக்கு முன் கூறாது வாகை பாடானுடன் சேர்த்து புறப்புறம் என்று பகுப்பில் கூறுவது பொருந்தாது. 7. தொல்காப்பியத்தில் வெட்சியில் அரசர் மேற்றாகிய மன்னுறு தொழில் ஒன்றே கூறியிருக்க, தன்னுறு தொழிலும் மன்னுறு தொழிலும் என இரண்டு தொழில் கூறியுள்ள வெட்சித் திணையை வெட்சிப்படலமெனத் தொல்காப்பியர் பன்னிருபடலத்தே கூறியுள்ளார் என்பது பொருந்தாது என்பர். இளம்பூரணர் இவ்வாறு கூறுவது ஆராய வேண்டிய செய்தியாகும். சிவஞான முனிவர் பாயிர விருத்தியுள் "அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நான்காகப் பகுத்தலும் வெட்சித்திணை, வஞ்சித்திணை, உழிஞைத் திணைகளின் மறுதலைவினையை வீற்றுவினையாதலும் வேற்றுப்பூச் சூடுதலுமாகிய வேறுபாடு பற்றி வேறு திணையாக வைத்தெண்ணுதலும் இன்னோரன்னவை பிறவுமாம். இவையிங்ஙனம் வேறுபடினும் பொருள் முடிவு வேறுபடாமையின் மரபுநிலை திரியாவாயின. இவ்வுண்மை உணராதார் பன்னிருபடலம் முதலிய நூல்களை வழிசியின வென்றிகழ்ந்து பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல் காப்பியனார் கூறியதன்றெனவும் தொல்லாசிரியர் வழக்கொடு முரணித் தமக்கு வேண்டியவாறே கூறுப" என்று கூறும் மறுப்பு இளம்பூரணர் கருதிய மாறுபாடாகும். சிவஞானமுனிவர் "வேறுபடினும் பொருண்முடிவு வேறுபடவில்லை" என்று அமைதி கூறுகிறார். இவ்வமைதி சிறப்புடையதாகத் தெரியவில்லை.