பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என வரும் தொல்காப்பியர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். “பரத்தையிற் பிரிவு காரணமாகப் பாணர் முதலியோரை ஊடல் தீர்க்கும் வாயிலாக அனுப்புதல், மருதநிலத் தலைவர்க்கே சிறப்புரிமையுடையதாயினும், அது தானிலத் தலைவர்கட்கும் பொதுவாக உரியதாகும். அவ்வழிப்பிரியும் பிரிவு தம் அறையும் நிலமாகிய ஊரைக் கடந்து நிகழ்வதில்லை என்பது மேற்காட்டிய நூற்பாவின் பொருளாகும், இதன்கண் நிலத்திரியின்று என வரும் சொற்குறிப்பால் இங்கு ‘நால்வர்' எனக் குறிக்கப்பட்டோர் நானிலத்தலைமக்களே என்பது நன்கு புலப்படுத்தப்பெற்றுள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும்.

இனி, தொல்காப்பியப் புறத்திணையியலில் வஞ்சித்திணையின் இலக்கணங் கூறுவது,

           “வஞ்சிதானே முல்லையது புறனே
            எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் 
            அஞ்சுதகத்தலைச்சென் றடல் குறித்தன்றே”

- (தொல். புறத்.5)

என வரும் நூற்பாவாகும். ‘வஞ்சியாகிய புறத்தினை முல்லை யாகிய அகத்திணைக்குப்புறனாம். அஃது ஒழியாத மண்ணை நச்சுதலையுடைய வேந்தனை மற்றொருவேந்தன் அஞ்சுதகத் தலைச் சென்று அடல் குறித்தது’ என இந்து ற்பாவிற்கு உரை வரைந்தார் இளம்பூரணர்,

'வஞ்சியெனப்பட்ட அகத்திணை முல்லையெனப்பட்ட அகத்திணைக்குப்புறனாம். இருபெருவேந்தர்க்கும் இடையீடாகிய மண்ணிடத்து வேட்கையானே ஆண்டுவாழ்வார்க்கு அஞ்சுதலுண்டாக, அந்நாட்டிடத்தே சென்று ஒரு வேந்தனை மற்றொரு வேந்தன் கொற்றங்கோடல் குறித்தது’ என இந்நூற்பாவுக்கு உரை வரைந்த நச்சினார்க்கினியர், "ஒருவன் மண்ணாசையால் மேற்சென்றால், அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணாசையால் மேற்சேறல் உளதாகலின், அவ்விருவரும் வஞ்சிவேந்தராவரென்றுணர்க” என விளக்கமும் கூறினார். இங்கு எடுத்துக்காட்டிய நச்சினார்க்கினியர் உரையும் விளக்கமும் தொல்காப்பியனார் கருத்தொடு முற்றிலும்

13

13