பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ள க. ச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நச்சினார்க்கினியம் : இது கட்டளை ஆசிரியத்திற்கு அடியுறழப்படாத சீர் இவை யென்கின்றது. (இ-ள்.). வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் கட்டளை ஆசிரியப் பாவில் வரும் அளவடிக்குப் பொருந்த நிற்றலின்று. எ- று. எனவே, நீடுகொடி, உரறுபுலி என முன்னிரையீற்றவிரண்டும் உறழும் என்பது ஈண்டுக்கொள்க. கட்டளையடி யிங்ங்ணம் வருமெனவே, சீர்வகையடிக்கு வெண்சீரும் ஆசிரியவுரிச் சீரும் பொருந்தவரும் என்றுணர்க. வெண்சீர் வந்தன மேற்கூறுப2. 'வண்புகழ் நிறைந்து வசிந்து வாங்கு” (திருமுருகாற்றுப்படை) என ஆசிரியவுரிச்சீர் பொருந்தவந்தது. ஆய்வுரை : இது வெண்பாவுரிச்சீர் ஆசிரியவுரிச்சீர் என்னும் இருவகைச் சீர்கட்கும் உரியதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் இன்பா நேரடிக்கண் ஒருசேர நிற்றல் இல எ-று. இங்கு, இன்பா நேரடி யென்றது. வெண்பாவினது நேரடியை யெனக் கொண்டார் இளம்பூரணர். வெண்பாவின் நாற்சீரடிக்கண் வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஒருங்கு நிற்றல் இல எனவே வெண்பாவுரிச்சீரும் இயற்சீரும் ஒருசேர நிற்றலை. (முன் பக்கத் தொடர்ச்சி) கட்டளையடியாதலின் கட்டளையடிக்கண் ஆசிரிய வடியுள் வெண்சீரும் வந்து உறழப் பெறும் என்றாராயிற்று. கட்டளையடியல்லாத சீர்வகையடிக்காயின், இன் சீரியையவருகுவதாயின், வெண்சீர் வரையார் ஆசிரியவடிக்கே’’ (செய். 0) எனப் பின்னர்க் கூறப்படுகின்றது. 1. இன்பா' என்றது, ஆசிரியப்பா எனவும் நேரடி என்றது கட்டளை யடியெனவும் பேராசிரியர் பொருள் கொண்டவாறே நச்சினார்க்கினியரும் பொருள் கொண்டார். 3. இன்சீரியைய வருகுவதாயின் வெண்சீர் வரை யார் ஆசிரிய வடிக்கே" (செய்யுளியல் க. ίύ)