பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ ஓ ஒ1. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் யிறந்து வந்ததன்றாயினுந் தளைவகை ஒன்றாமையின் இது பதின் மூவாயிரத் தெழுதுாற்றெட்டினுட் படாதாயிற்று.

  • வண்டு வரகு வரகு வரகு”

என்கின்ற அடியினை மீட்டுந் தந்து தொடைகொள்ளுங்கால் வண்டு வரகு வரகு வரகு என்றது நேரொன்றாசிரியத்தளை தட்கு மாதலான் இது வழுவெனப்படுமென்பது.? கலிப்பாவிற்கு அன்ன தொரு வரையறை இல்லை. இருவாற்றானும் வருமென்பது என்னை ? "வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே (தொல் செய் 92) என்றாராகவின்.ே மேலைச்சூத்திரத்தானே தளைவகை சிதையாமல் அறுநூற்றிருபத்தைந்து வகைப்படுவது நாற்சீரடியே என்பது உங் கூறி, அந்நாற்சீரடியே நாம் முன்னர் வேண்டுந் தொடை விகற்பத்திற் குரியவென்பது உங் கூறினான். இச்சூத்திரத்தானே அத்தொடை கொள்வது தம்மின் வேறாகாத இரண்டடிக்கண் ணென்பது உம் அறுநூற்றிருபத்தைந்தடியுள் ஒன்றனை இருகாற் சொல்லித் தொடை கொள்ளப்படுமென்பது உம் அங்ங்னந் தொடுக்குங்காலும் அடியோடு அடிக்கூட்டத்தின் கண்ணுந் தளைவகை சிதையாமல் தொடுக்க வேண்டு. மென்பது உங் கூறியவாறாயிற்று. இவற்றானெல்லாம் நாற் 1. தளைவகை ஒன்றுதலின்’ என அச்சுப்புத்தகத்திற் கானப்படும் பாடம் இங்குப் பேராசிரியர் தரும் விளக்கத்துடன் பொருந்தாமையால், தளைவகை ஒன் நாமையின் எனத் திருத்தப் பெற்றது. இங்குத் தளைவகை ஒன்றாமை என்றது. மாத்திரைவகையால் செப்பலோசை சிதைதவை. இவ்வெண்டாவடிகள் பிறடாவுக்குரிய சீருந்தளையும் விரவாது வரினும் அடிமுழுவதும் வெண்சீரே வந்தமையால் இவ்வடி வெண்பாவுக்குரிய செப்பலோசை கட்டளையுட் படாதாயிற்று. 2. வண்டு வரகு வரகு வரகு எனவந்த அடியேவந்து தொடையொன்றிய தாயினும், முதலடியின் ஈற்றுச் சீரும் இரண்டாமடியின் முதற்சீரும் இணையும் நிலையில் நேரொன்றாசிரியத்தளைதட்டு வெண்டளையிழைத்தலான் இது வழிப்பட்டது. 3. கவிப்பாவிற்குத் தளைகொள்ளுங்கால் வெண்பாவிற்குப்போன்று முதலடியின் இறுதியும் இரண்டாமடியின் முதலும் தளையியைந்து வருதல் வேண்டுமென்னும்வரையறையில்லை. தளை ஒன்றியும் ஒன்றாமலும் வரும் இருநிலைமை கலிப்பாவிற்கு உண்டு என்பதாம்.