பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளகம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் தூஉம் இயற்சீர்ப் பாற்படுத்தியற்றுக’ வெனவே இவைதா மியற் சீரல்ல, அவற்றது செய்கை இவற்றானுங் கொள்கவென்ற துணையே ஆண்டுக்கூறியதென்பது;1 அல்லதுTஉந் தேவரும் நரகரும் மக்கட்பாற் படுத்துத் (மரபியல்-33) திணைகொள்ளப்படு மென்ற துணையானே பிறப்பானும் பெற்றியானும் மக்களென வழங்கார். அதுபோல அசைநிலைத் தளையுஞ் சீர்நிலைத்தளையும் ஒக்குமென்றதுணையானே அவை அசைச்சீரெனவே, அடையடுத்தே சொல்லவேண்டுவனவற்றையும் வாளாதே சீரெனப் படுவனவற்றையும் ஒருவகையானே சீர்நிலையென மயங்கக்கூறல் (மரபியல்-108) குற்றமாமென்பது.? மயங்கக் கூறல் குற்றமன் றென்பார் உளராயின் அவர்கருத்தினான் அதுவும் அமையுமென்பது. ஒரு சாதியல்லனவற்றைச் சாதிப்பெயரொன்றெனவும் புகலார்; அதுபோலச் சீரிலக்கணமுடைய இயற்சீர் உரிச்சீர்களைச் சீரெனக்கூறி அவ்வினத்தவல்லாத அசைச்சீரை இலேசினாற் கொண்டாமென்பது. ஒரெழுத்துச்சீர் நுந்தையென ஒன்றேயாம்; இதனோடு வண்டு என்னும் அசைச்சீர்3 கூட்ட இரண்டாம். ஈரெழுத்துச்சீர் நான்கு; அவை: தேமா ஞாயிறு போதுபூ போரேறு என வரும். மின்னு வரகு என்னும் அசைச்சீர் இரண்டனோடுங் கூட்ட ஆறாம். 1. உரியசைச்சீரினைத் தளைவகை சிதையாத் தன்மைக்கண் இயற்சீர்ப்பாற் படுத்து இயற்றிக்கொண்டதல்லது அந்நிலையிலும் அசையிரண்டாகாமையின் அதனைப் பொதுவகையாற் சீரெனக்கொள்ளுதல் ஆசிரியர் கருத்தன்றாம். உரியசையும் சீராம் என்பது தொல்காப்பியர் கருத்தாயின், ஈரசை கொண்டு மூவசை புணர்ந்துஞ் சீரியைந் திற்றது. சீரெனப் படுமே' (செய் - 12) என வரையறை கூறமாட்டார். அன்றியும் அவற்றை இயற்சீர்ப்பாற்படுத்து இயற்றுக’ எனவே அவை இயற்சீரல்ல என்பதும் சீரது செய்கை இவ்வசை களானுங் கொள்க என்ற அளவே அங்குக் கூறியதென்பதும் புலனாம். 2. தேவாையும் நரகரையும் மக்களொடுபடுத்து உயர்தினையெனக் கூறிய வழி, தேவரும் நரகரும் பிறப்பினாலும் பண்பினாலும் மக்களென வழங்கப் பெறுவாரல்லர். அதுபோலவே அசைநிலைத்தளையும் சீர்நிலைத்தளையும் ஒக்கும் எனக்கூறிய அளவினாலேயே அடையடுத்துக் கூறப்படுவதன்றிப் பொதுவாகச் சீர் எனவழங்கப் பெறுதல் இல்லை என்பதாம். 3. வண்டு - நேர்பு; ஓரெழுத்து உரியசைச்சீர்; இது தேமாபோன்று இயற் சீர்ப்பாற்படுத்த இயற்றப்பெறும் .