பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சங் st-sif GT (இ-ள்) தத்தம் ஓசை இனிது விளங்க ஒலித்தற்றொழில் இல்லாதனவாகிய எழுத்துக்கள் சொற்கு உறுப்பாவன எனினும் அவை மேல் ஐவகையாகப் பகுத்துரைக்கப்பட்ட கட்டளை. யடிக்கண் எழுத்தெனக் கொண்டு எண்ணப்பெறமாட்டா; அவை உயிருமெய்யுமாகிய எழுத்துக்களைப்போன்று விரிந்திசைத்தலும் தனித்தியங்குந் தன்மையும் இன்மையால் எ-று. ‘உயிர் இல் எழுத்து' என்பன, ஒலித்தற்றொழில் இல்லாத ஒற்றும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமுமாகிய அரைமாத்திரையளவுடைய எழுத்துக்கள். கட்டளையடிக்கண் இவை யெண்ணப்பெறுதல் இல்லை யென்பது, 'குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமும் ஒற்றும் என வொரு நான்கொழித்துக்-கற்றோர் உயிரும் உயிர்மெய்யும் ஒதினார் எண்ணச் செயிரகன்ற செய்யு ளடிக்கு” (யா-வி. அடியோத்து. ) எனவரும் யாப்பருங்கல விருத்தி மேற்கோட்செய்யுளால் விரித்துரைக்கப் பெற்றமை காண்க. சங் வஞ்சி அடியே இருசீர்த் தாகும். இளம்பூரணம் : என்-எனின். வெண்பா ஆசிரியங் கலிக்குரித்தாகிய அடியிலக் கணங் கூறினார். இனி வஞ்சிப்பாவிற்குரிய அடிவரையறை உணர்த்துதல் துதலிற்று. (இ-ள்.) வஞ்சிப்பாவிற்குரிய அடி இரண்டு சீரையுடைத்து! என்றவாறு. (<ga Ibá ) பேராசிரியம் : இது, 'நேர்நிலை வஞ்சிக் காறு மாகும்' (தொல்.செய்-42) எனவும், "தன்சி ரெழுத்தின் சின்மை மூன்றே" (தொல்-செய்.46) எனவும், எழுத்தெண்ணி வரையறுக்கப்பட்ட சீரிரண்டு கொண்டது வஞ்சியடி யென்பதுணர்த்துதல் நுதலிற்று : 1. இரு சீர்த்து - இரண்டு சீரையுடைத்து.