பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச உ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கொச்சகக்கலிக்கு வரையறை கூறாமையாற் பொருண் முடியுங் காறும் வரப்பெறும் என்று கொள்க. அவ்வழிப் பல. வுறுப்பாகி வருதலின் அதற்குறுப்பாகிய செய்யுளளவிற்றாதல் வேண்டும். உறழ்கலியுங் கொச்சகக் கவிப்பாற்படும். இது, பரிபாட்டின்கண் வரும் வெண்பாவிற்கு அளவு கூறுகின்றது. (இ - ள்.) பரிபாடற்கு உறுப்பாகிய வெண்பாவுக்கு நானுாறடி பெருக்கத்திற் கெல்லை யாகவும் இருபத்தைந்தடி சுருக்கத்திற்கெல்லை யாகவும் பெறும் (எ- று) 2 அவை பரிபாடலுட் கண்டுகொள்க. (கசு உ) நச்சினார்க்கினியம் : இது முறையே பரிபாடற் கெல்லை கூறுகின்றது. (இ-ஸ்.) பரிபாடற் குறுப்பாகிய வெண்பாவும், பொதுப்பாவும் நானூறடி பெருக்கத்திற் கெல்லையாகவும் இருபத்தைந்தடி சுருக்கத்திற் கெல்லயைாகவும் பெறும். எ-று. அவை தொகையுட் காண்க. 1. சிே அ-ஆம். சூத்திரத்திற் கொச்சகக்கவிக்கு ஆசிரியர் அடிவரையறை கூறாமையின் பொருள் முடியுங்காறும் வேண்டும் அடிகளைப் பெற்றுவரும். அங்ஙனம் வருங்கால் பல வுறுப்புக்களைப் பெற்று வருதலின் அதற் குறுப்பாகிய செய்யுள் அளவிற்றாய அடிகளா லியன்று வரும். உறழ்கவியும் கொச்சசுக்கலிபோன்று பல வுறுப்பாகி வருதலின் அதற் குறுப்பாகிய செய்யுள ளவிற்றாய் வரும். 2. பரிபாட்டிற்கு அடி யுயர்பு எல்லை நாலிரைம்பதடியாக அடி இழிபுக்கு எல்லை ஐயைந்து ஆகும் என இயையும். நாலிரைம்பது - இருநூறு - ஜயைந்துஇருபத்தைந்து. இங்குப் பரிபாட்டு என்பதற்குப் பரிபாடற்கு உறுப்பாகிய வெண்பா எனப்பொருள் கொண்டார் பேராசிரியர். இதுமுறையே பரிபாடற்கு எல்லை கூறுகின்றது. எனக் கருத்துரை வரைந்தார் நச்சினார்க்கினியர். 3. பரிபாட்டின்கண் வரும் வெண்பாவிற்கு அளவு கூறுகின்றது எனக்கருத்துரைத்தார் பேராசிரியர். பரிபாடற் குறுப்பாகிய வெண்பாவும் பொதுப்பாவும் கலந்து வரும் முழுமை நிலையிற் பரிபாடற்கு எல்லை கூறுகின்றது என நச்சினார்க்கினியர் கருத்துரை வரைந்துள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத் தகுவதாகும்.