பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள எரு త్రొక్షణ్ణి జీ பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல்” (யாப். வி. ப. உசச) என வரும், கவித்தாழிசையாவது அடிவரையின்றி ஒத்துவந்து சற்ற4. சில சீர் மிக்குங் குறைந்தும் வருவது. அது, "வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியியெங் கேள்வரும் போழ்தின் எழால்வாழி வெண்திங்காள் கேள் வரும் போழ்தின் எழாதாய்க் குறாஅலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்” (யாப். வி. ப. க.க.0) என வரும். இத்தாழிசை ஒருபொருள்மேல் மூன்றடுக்கிவரினுங் கொச்சக வொருபோ கெனப்படா, கலித்தாழிசை யெனப்படும், ஈற்றடி மிக்குவருதலான். இனி ஆசிரியத்துறையாவது நான்கடியாய் இடையிடை சீர் குறைந்து வரும். அது, 'கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்உள்ளி வருதிராயின் அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக நரையுருமே றுங்கை வேலஞ்சு நும்மை வரையர மங்கையர் வெளவுதல் அஞ்சுதும் வாரலையோ' (யாப். வி. ப. உகரு) என வரும். வஞ்சித்துறையாவது குறளடி நான்கினால் தனித்துவரும். இது, 'முல்லைவாய் முறுவலித்தன கொல்லைவாய்க் குருந்தீன்றன மல்லல்வான் மழைமுழங்கின செல்வர்தேர் வரவுகாண்குமே” (யாப். வி.ப. க. சக) என வரும். இனி, வெண்டுறையாவது மூன்றடிச் சிறுமையாக ஏழடிப் பெருமையாக வந்து இறுதியடிகளில் சில சீர் குறைந்துவரும்.