பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச.உ தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரைவளம் உதாரணம் பேராசிரியருரையிற் காண்க. உசாவுதல் - உரையாடுதல். தம்முளும் என்புழி உம்மை எதிர்மறையால் திமிக்குள்தாம் உரையாடுதல் சிறுபான்மை என்பதாம். ன்க். உ. ஞாயிறு திங்கள் அறிவே நரணே கடனே கானல் விலங்கே மானே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையஸ் பிறவு துதலிய நெறியாற். சொல்லுந் போலவுங் கேட்குரு போலவுஞ் சொல்லிய4ங் கமையும் என்மனார் புலவர். இனம்பூரணம் : என் எனின். இதுவுங் கேட்டற் பெருண்மைக்கண் வருவ தோர் மரபு வழுவமைத்தலை உணர்த்துதல் துதலிற்று. (இ.ஸ்) ஞாயிறு முதலாக நெஞ்சு ஈறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும் அத்தன்மைய பிறவுமாகிய மக்களல்லாத பொருள்கள் தாங் கருதிய நெறியினானே சொல்லுவன போலவுங் கேட்குநபோலவுஞ் சொல்லியமையப்பெறும் என்றவாறு. ஆங்கு - அசை. "பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட் கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை வழிபட் டிரக்குவேன் வந்தேனென் நெஞ்சம் அழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை ஒழிய விடாதீமோ என்று.” (கலித். கசங்) "மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேற் காதலை வாழி மதி.” (குறள். க.க.க.அ) "உறுதி தூக்கத் தூங்கி அறிவே சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை” (நற்றிணை. உஅச) 1. துவவிய' என்பது, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்டபாடம் கானல்-கடற்கரைச்சோலை, புள்-பறவை. புலம்புறு பொழுது - தனிமைத் துயரை விளைக்கும் மாலைக்காலம்.