பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருகா தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் பாடென்றான், அது தேவருவகங் கூறினும் அதனைக் கண்டாங்கறியச்செய்தல் செய்யுளுறுப்பாம்! என்றவாறு. அவை, "மையற விளங்கிய மணிமரு எவ்வாய்தன் மெய்பெறா மழலையில் விளங்குயூ ணனைத்தர” (கலி:84) என்றாற்போல வருவன. தலைவரு பொருளா னெனவே நோக் குறுப்பால், உணர்ந்த பொருட்பிழம்பினைக் காட்டுவது மெய்ப் பாடென்பது இதன் கருத்து. இக்கருத்தினாற் கவி கண்காட்டும்’ எனவுஞ் சொல்லுப.2 (a_O ra) நச்சினார்க் கினியம்: இது மெய்ப்பாடென்னும் உறுப்புக் கூறுகின்றது. அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோ ராற்றான் வெளிப்படுதல். உய்த்துணர்ச்சியின்றிச் செய்யுளிடத்து வந்த பொருளானே கண்ணிரரும்பல், மெய்ம்மயிர்சிலிர்த்தன் முதலிய சத்துவம் படுமாறு வெளிப்படச்செய்வது மெய்ப்பாடென்னு முறுப்பாம். எ-று. அது தேவருலக முதலியவற்றைக் கூறினுங் கண்டாங்கறியச் செய்யுள் செய்தல் செய்யுளுறுப்பென்றார். உ-ம் “மையற விளங்கிய மணிமரு ளவ்வாய் தன் மெய்பெறா மழலையின் விளங்குயூ ணனைத்தரப் பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவினை புருள்கல நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர வுருவெஞ்சா திடைகாட்டு முடைகழ லந்துகி லரிபொலி கிண்கிணி, யார்ப்போவா தடிதட்பப் பாலோ டலர்ந்த முலைமறந்து முற்றத்துக் 1. செய்யுளின் பொருளையுணர்ந்தால் அப்பொருளுணர்ச்சியாலே செய்யுளிற் கூறப்படும் பொருள் வேறுகட்புலனாகக் கண்டாற்போன்று அறிதலை மெய்ப்பாடு என்னும் உறுப்பு என்றார் ஆசிரியர். உலகமக்களாற் காணப்படாத வானோருவகினைப் புலவன் கூறினாலும் அவ்வுலகினைக் கட்புலனாகக் கண்டாற்பேகன்று அறியச்செய்தல் மெய்ப்பாடு என்னும் உறுப்பாகும் என்பதாம். 2. தலைவருபொருள் செய்யுளிடத்தே சொல்லப்படும் பொருள். அஃதாவது நோக்கு என்னும் உறுப்பால் உணர்ந்த பொருளின் வடிவத்தினைக் கட்புலனாமாறு காட்டுவது மெய்ப்பாடு என்னும் கருத்தில் வழங்குவது, கவிகண் காட்டும்' என்னும் பழமொழியாகும்.