பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/787

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஎ சு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே' (குறுந் எக) இப்பாட்டுப் பொருளின்றிவந்தது. "ஈயற்புற்றத்து” (அகம் எ) என்னும் பாட்டுத் துறைவகையின்றி வந்தது. மாட்டும் எச்சமு மெடுத்தோதினார் முன்னமும் பொருளுந் துறைவகையும்போல இன்றியமையாச் சிறப்பினவல்ல வென்றற்கு." ஆய்வுரை : இது, மேற்கூறியவற்றுள் ஒருசாரனவற்றுக்குப் புறனடை கூறுகின்றது. (இ-ஸ்) முற்கூறிய மாட்டு, எச்சம் என்னும் இவ்வுறுப்புக்கள் மேற்கூறிய மாத்திரை முதலிய ஏனை யுறுப்புக்கள் போன்று அத் துணை இன்றியமையாதன அல்ல என்பது பெறப்படும். உடனிலை மொழிதலாவது, அகன்றும் அணுகியும் உள்ள சொற்களைக் கொண்டுவந்து கூட்டவேண்டாது அவைதாமே ஒருங்கு இயைந்து நின்று பொருள் தரும்படி ஒருங்கு இணைந்து கிடக்கும்படிச் செய்யுள் செய்தல். நிறுத்தமுறையானே எச்சமும் மாட்டும் என்னாது மாட்டும் எச்சமும் என 'மாட்டு’ என்பதனை முற்கூறிய அதனால் மாட்டு முதல் அதற்குமுன்னர்க் கூறப்பட்ட எச்சம் என்பது இறுதியாகவுள்ள ஐந்துறுப்புக்களுள், இடையே எண்ணப்பட்டுள்ள துறை, பொருள்வகை, முன்னம் என்னும் மூன்றுறுப்புக்களும் செய்யுட்கு இன்றியமையாதன அல்ல என்பது இலேசினாற் கொள்ளப்படும் எனவும் இவ்வைந்தனுள் மாட்டு எச்சம் என்னும் இரண்டையும் ஆசிரியர் எடுத்தோ தினமையால் இடைநின்ற மூன்றுறுப்புக்களைப் போன்று இவையிரண்டும் அத்துணை இன்றியமையாச் சிறப்பின அல்ல எனவும் கருத்துரை வரைவர் பேராசிரியர். 1. முன்னம் பொருள். துறைவகை என்னும் மூவகை புறுப்புக்களையும் கிளந்து கூறாது மாட்டு, எச்சம் என்னும் இரண்டினையுமே ஆசிரியர் எடுத்தோதினமையால் அவை மூன்றும் மாட்டு எச்சம் என்னும் இரண்டினைப்போல அத்துணை இன்றியமையாச் சிறப்பின அல்ல என்பது ஆசிரியர் கருத்தாதல் புலனாம்.