பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/817

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த00க தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அது வஞ்சிபோ லற்றுச் சேறல். “யானுடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானூட யானுணர்த்தத் தானுணரான் 월 றேனுாடும்’ (முத்தொள்.) எனத்துங்கல் வண்ணம் வந்தது. ஆய்வுரை : இது, தூங்கல் வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) தூங்கல் வண்ணமவது வஞ்சிப்பாவிற்குரிய வஞ்சி. யுரிச்சீர் பயின்று வருவதாகும் எ-று. உஉங். ஏந்தல் வண்ணம் சொல்விய சொல்லிற் சொல்வியது சிறக்கும். இனம்பூரணம் : என்-எனின். ஏந்தல் வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ஸ்) ஏந்தல் வண்ணமாவது சொல்லிய சொல்லினானே சொல்லப்பட்டது சிறக்கவரும் என்றவாறு: உதாரணம் உ.ம் "கூடுவார் கூடல்கள் கூட லெனப்படா கூடலுட் கூடலே கூடலுங்-கூடல் அரும்பிய முல்லை யரும்பவிழ் மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு” (யாப்.வி.ப.க.அ.அ) (உ.உங்) என வரும். (உகடஉர் (இ-ள்) சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்வது ஏந்தல் வண்ணம் (எ-று).” 1. இங்கு வஞ்சி என்றது, வஞ்சிப்பாவினைமட்டுங் குறிப்பதன்று: வஞ்சித் தாக்குப் போன்று அற்றுச் செல்லும் ஒசையினைக் குறிப்பதாகும். 2. சொல்லியசொற்களை மேலும்மேலும் தாங்கிநிற்றலால் ஒசை ஏந்தல் வண்ணமாகும். ஏந்தல் வண்ணத்திற்கு இத்தொல்காப்பியச் சூத்திரமே இலக்கியமாக அமைந்துள்ளமை காண்க. 3. சொல்விய சொல்வினாலே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்வது ஏந்தல் வண்ணம். எனவே, அதன் கண் முன்னர்ச் சொல்லப்பட்ட ஒரு சொல்லே பலவாக மிக்குவரும் எனக் கொண்டனர் உரையாசிரியர்கள்.