பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரயியல் 離25 'யாஅ வொண்டளி ராக்கு விதிர்த்தன்ன’’ (அகம் : 166) எனவும், தோடுதோய் மலிர்நிறை யாடி யோரே' (அகம் : 166) எனவும், 'மேக்கெழும் பெருஞ்சினை யிருந்த தோகை” (குறுந் : 26) எனவும், - 'கொய்கழை யகைகாஞ்சித் துறையணி நல்லூர' (கலி :74) எனவும், 'நனைத்த செருந்தி' (அகம் : 450) எனவும், 'அண்டர் மகளிர் தண்டழை யுடிஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போல' (அகம் , 59) என்றாற்போல வருவனவுமெல்லாங் கொள்க. மேலைச் சூத்திரத்துப் "புல்லொடு வருமெனச் சொல்லினர்’ (641) எனவும், இச்சூத்திரத்து 'மரனொடு வரூஉங் கிளவி' (642) யெனவும் மிகைபடக் கூறியதென்னையெனின்,- அம்மிகையானே எடுத்தோதிய புறக்காழனவும் அகக்காழனவுமன்றி அவற்றொடு தழிஇக்கொள்ளப்படுவனவுமெல்லாம் இவற்றுக் குரிய வென்பது கொள்க. அவை, ஊகம்புல்லுஞ் சீழகம்புல்லும் பஞ்சாய் முதலியன வும்; புழற்கால் ஆம்பல் முதலியனவும் புல்லெனப்பட்டங்கி யவற் றின் பெயரும் பெறுமென்பது. பிடாவுங் காயாமுதலிய புதலும்: பிரம்புமுதலாகிய கொடியும், மரமெனப் பட்டவற்று உறுப்பின் பெயர் பெறுமென்பது, அவை ஊசந்தோடு சீழகந்தோடு எனவும் பிடவிலை காயாம்பூ முல்லைப்பூஎனவும் வரும். பிறவும் அன்ன. மற்றுப் பிறப்பு முறையால் தளிர் முற்கூறாது இலை முற் கூறியதென்னையெனின், - புல்லினுள் ஒருசாரன இலையெனவும் பூவெனவும் படுமென அதிகாரங்கோடற்கென்க. அவை, 'சத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை'(பெரும்பாண் 88) எனவும்,