பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 77 இது புள்ளின் வைத்தமையாற் புள்ளின் பின் வருதல் பெரும் பான்மை. பேராசிரியம் : (இ-ள்) பேடையும் பெடையுமென்னும் இரண்டும் முன் னர் நின்ற புள்ளிற்கு ஒன்றும் (எ-று). அவை குயிற்பேடை அன்னப்பெடை, என வரும். நாடின்’ என்றதனாற் பெட்டையென்பது வழக்கினுட் பயிலாவென்பது.1 ஆய்வுரை : (இ-ள்) பேடை என்னும் பெயரும் பெடை என்னும் பெயரும் ஆராயுமிடத்துப் பெட்டை என்ற பெண்மைப் பெயர் போன்று (பறவையினங்கட்கு உரியனவாகப்) பொருந்தி வழங்கும் எ-று. இச்சூத்திரம் பறவைக்குரிய மரபுப்பெயர் கூறும் சூத்திரத் தின் பின் வைத்தமையால் பெடை, பேடை என்னும் பெண்மை பற்றிய மரபுப்பெயர்கள் பறவைகட்கு உரியனவாய் வழங்கு தல் பெரும்பான்மை என்பர் இளம்பூரணர். நாடின்' என்ற தனால் பெட்டை என்பது வழக்கினுட் பயிலா என்றார் பேராசிரியர். 1. நாடின்' என்றதனால், பெட்டை, பெடை, பேடை என்னும் பெண்மை பற்றிய மரபுப்பெயர்களுள் பெடை பேடை என்பனவே பயிலவழங்கும் எனவும் பெட்டை' என்ற பெயர் உலக வழக்கினுள் பயின்று வழங்காது எனவும் கொள்வர் பேராசிரியர். 'தடமண்டு தாமரையின் தாதா டலவன் டமண்டிச் செல்வதனைக் கண்டு-பெடைளுெண்டு பூழிக் கதவடைக்கும் புத்துரே பொய்கடிந் து.ாழி நாடாயினா னுார் (யாவி-ப. 232) என நண்டிற்குப் பெடை வந்தது. 'எருமைப் பேடையோ டெமgங் கயரும்’ (கலி 144) எருமைப்பேடையென்றது. பேடையும் பெடையும் நாடி னொன்றும் என்பதனால் அமைத்தாம்' (சீவக. 1778) என இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் தரும் உரைவிளக்கம் இங்குக் குறிக்கத் தகுவதாகும்.