பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.தொல்காப்பியம் - பொருளதிகாரம் مانند:

9.

மேற் குறிப்புப் பற்றி வரும் மெய்ப்பாடு கூறினார்; இது பண்புந்

  • میم

தொழிலும் பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது.

வினை:ன் மெய் உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமைத் தோற்றம்

என்பது சூத்திரம்.

இளம்பூரணம்

இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உவமத் தினை யொருவாற்றாந் பாகுபாடு உணர்த்துதல் துதலிற்று.

(இ - ள்.) வினைபயன் மெய்யுரு என்ற நான்கே வகைபெற வந்த உவமைத் தோற்றம் என்பது-தொழிலும் பயனும் வடிவும் நிறனும் என்று சொல்லப்பட்ட நான்குமே அப்பாகுபட வந்த உவமைக்கண் புலனாம் என்றவாறு.

எனவே கட்புலமல்லாதனவு முள என்றவாறாம். அவை செவி யினானும் நாவினானும் மூக்கினானும் மெய்யினானும் மனத்தினானும் அறியப்படுவன. இவ்விருவகையும் பாகுபடவந்த உவமையாம்'.

அவற்றுட்,கட்புலனாகியவற்றுள் வினையாவது நீட்டல், முடக்கல் விரித்தல், குவித்தல் முதலாயின. பயனாவது நன்மையாகவும், தீமை யாகவும் பயப்பன. வடிவாவது வட்டம், சதுரம், கோணம் முதலாயின. நிறமாவன வெண்மை,பொன்மை முதலாயின. இனிச்செவிப்புலனாவது ஓசை, நாவினான் அறியப்படுவது கைப்பு, கார்ப்பு முதலிய சுவை மெய்யினான் அறியப்படுவன வெம்மை தண்மை முதலாயின. மூக்கால் அறியப்படுவன நன்னாற்றம், தீநாற்றம். மனத்தால் அறியப்படுவன இன்ப துன்ப முதலியன.

உதாரணம்

புலிபோலப் பாய்ந்தான்' என்பது வினை. மாரி யன்ன வண்கை' (புறம், கங்ங்) எபன்து பயன். 'துடி போலும் இடை” என்பது வடிவு. தளிர் போலும் மேனி என்பது நிறம்.

1. பாகுபட வருதலாவது, கண் முதலிய பொறிகட்குப் புலன்வனவும், .ெ மி.

به پایه

கட்கும் புலனாகாது மனத்தி

§ همشت: لري

குப் புலனா வ ைவும் ைஇருவகைப்பட வருதல்.