பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுக தொல்காப்பியம் - பொருளதிகாரம்

னைக் கண்டு அளவளாவும் நிலையேற்படுதல் இயல்பாதலின் இது பற்றித் தோழிக்கு உரைக்க வேண்டிய இன்றியமையாம்ை நேராது.

இவையெல்லாம் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின் நிகழ்வன எனவும், உள்ளப் புணர்ச்சியால் உரிமை பூண்டிருந்த தலைவியரும் மனநிகழ்ச்சியால் தலைமகனைக் கூடி உள்ள்ம் ஒன்றியிருத்தலால் இவ்வாறு கூற்று நிகழ்த்தற்குரியர் எனவும் இளம்பூரணர் கூறும் கருத்து தொல்காப்பியனார்க்கு ஒத்த்தேயாகும்.

உயிராக் காலம் - தலைமகள் தன் உள்ளக் கருத்தினை வெளியிட்டு உரைத்தற்கு ஏற்றதல்லாத காலம். உயிர்த்தல்-நெஞ்சத்தில் துன்பச் சுமையைத் தாங்கலாற்றாது நெட்டுயிர்ப்பெறிதல்; பெருமூச்சு விடுதல். 'உயிர்செல' என்புழிச் செல’ என்னும் செயவென் வாய்பாட்டு வினையெச்சம் வேற்றுவரைவு வரின் என்ற தொடரிலுள்ள வரின் என்னும் பிறவினை முதல் வினைகொண்டு முடிந்தது. மாற்றுதல்-நிகழாதவாறு தவிர்த்தல். பொறி-நல்லூழ். பொறியின்மை யார்க்கும் பழியன்று (திருக்குறள் 6.18) என்புழி இச்சொல் இப்பொருளிற் பயின்றுள்ளமை காண்க.

அருமைசான்ற நாலிரண்டு வகையாவன, அழிவில் கூட்டம்’ எனப்படும் கற்பிற் புணர்ச்சிக்கு உரியனவாக மெய்ப்பாட்டியல் 23 ஆம் நூற்பாவிற் கூறப்பட்ட முட்டுவயிற்கழறல் முதலாகவுள்ள எண்வகை மெய்ப்பாடுகள் என்பர் இளம்பூரணர்.

உஉ வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்

வரையா காளிடை வந்தோன் முட்டினும் உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும் தானே கூறுங் காலமும் உளவே.

இளம்பூரண ம்

இதுவும் தலைவிமாட்டுச் சொல் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ- ள்.) தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கு கின்றான்; இன்னநாள் வரைந்து கொள்வல் எனக்கூறித் தோழியிற்

கூட்டத்திற்கு முயலாது தணந்தவழி யதனைத் தோழி ஐயப்படுங் குறிப்புத் தோன்றாமை மறைத்தொழுகிய தலைவி அவன் வருந்