பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 of £. தொல்காப்பியம்-பொருளதிகாரம்

நாடு முதலாயின சுட்டித் தலைவன்மாட்டுத் தோன்றுங் கிளவி யாவன-நீ இத்தன்மையாகிய நாட்டையுடையை, இத்தன்மையாகிய நகரையுடையை; இத்தன்மைத்தாகிய இல்லையுடையை; இத்தன் மைத்தாகிய குடிப் பிறப்பை யுடையை, இத்தன்மைத்தாகிய சிறப் புடையை, என அவற்றின் மிகுதிபடக் கூறுதல். அவை வருமாறு : கோழிலை வாழை என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள் ' குறியா வின்பம் எளிதின் நின்மலைப்

பல்வேறு விலங்கும் எய்து நாட குறித்த இன்பம் நினக்கெவன் அரிய’

என நாடு சுட்டி வந்தது.

  • காமங் கடப்ப உள்ளம் இனைப்ப

யாம்வந்து காண்பதோ பருவ மாயின் ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு யாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ. (ஐங்குறு.237) இஃது ஊர் பற்றி வந்தது.

துணைபுணர்ந் தெழுதரும் என்னும் கலித்தொகைப் -

பாட்டினுள்,

"கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத்

தொடிநெகிழ்ந்த தோளளாத் துறப்பாயால் மற்று நின் குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ. ’’

இது, குடிமை பற்றி வந்தது.

'ஆய்மலர்ப் புன்னைக்கீழ் அணிநலத் தோற்றாளை தோய்மலி நிலையளாத் துறப்பாயால் மற்று நின் வாய்மைக்கண் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ.’’

" திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநல ந் தோற்றாளை

துவழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயால் மற்று நின் புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ...'

(கலித். 135)

தாமரைக் கண்ணியைத் தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மனங்கமழ் நாற்றத்த மலை நின்று பலிபெறுTஉம் அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே' (கலித். 52 )