பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உநி & so, so

நிறுவி யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங் குறியா வின்ப மெளிதி னின் மலைப் பல்வேறு விலங்கு மெய்து நாட குறித்த வின்ப நினக்கெவ னரிய வெறுத்த வேளர் வேய்மருள் பனைத்தோ னிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு இவளு மினைய ளாயிற் றந்தை யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக் கங்குல் வருதலு முரியை பைம் புதல் வேங்கையு மொள்ளினர் விரிந்தன நெடுவெண் டிங் சளு மூர்கொண் டன்றே. ’’ (அகம் ..2)

விலங்கும் எய்து நாட வென்று அந் நாட்டினை இறப்பக் கூறி இந் நாடுடைமையிற் குறித்த இன்பம் நினக்கெவ னரிய’ வென வரைதல் வேண்டியவாறும், வேங்கை விரிந்ததனால் தினை யறுத்தலின் இற்செறிப்புக் கூறியவாறுங் கங்குல் வருதலும் உரியை’ யெனப் பகற்கு றி மறுத்து இரவுக்குறி நேர்வாள்போற் கூறி "நெடுவெண்டிங்களுமூர்கொண்டன்றே யென்று அதனையும் மறுத்து வரைதற்கு நல்லநா ளெனக் கூறி வரைவுகடாயவாறுங் காண்க.

'துணை புணர்ந் தெழுதரும்’ என்னும் நெய்தற்கலியுட்,

"கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிநெகிழ் தோளளாத் துறப்பாயான் மற்று நின் குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ, ஆய் மலர்ப் புன்னைக்கீ ழணிநலந் தோற்றாளை நோய்மலி நிலையளாத் துறப்பாயான் மற்று நின் வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ, திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநல ந் தோற்றாளை யிகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின் புகழ்மைக்கட் பெரியதோர்புகராகிக் கிடவாதோ'

(கலி. 135)

என இவை ஒழுக்கமும் வாய்மையும் புகழும் இறப்பக் கூறியன. குடிப்பிறந்தார்க்கு இம் மூன்றுஞ் சிறப்பக் கூறல் வேண்டும். ஏனைய வந்துழிக் காண்க,