பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oយ៩៦

பதிப்புரை

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் மூன்றாவது இது இலாக அமைந்தது களவியல். பொருளதிகாரத்தின் முதலிய லாகிய அகத்திணையியலில் அ ன் பி ைன ந் திணையொழுகலாற்றின் பொதுவிலக்கண முணர்த்திய தொல்காப்பியனார் அகத்தினைப் பகுதியாகிய களவு கற்பு என்னும் இருவகையொழுகலாறுகளுள் களவொழுக்கத்திற்குரிய விதிகளை இவ்வியலில் விரித்துக் கூறி யுள்ளார். இவ்வியலுக்கு இளம்பூரணருரையும் நச்சினார்க்கினிய ருரையும் வழங்கி வருகின்றன. இவ்விரண்டுரைகளையும் சூத்திர ந் தோறும் கால அடைவில் முறையே அமைத்து இவ்வுரைகள்ைம் பயில்வார்க்கு உறுதுணையாகிய உரைவிளக்கங்கள் அவ்வவ்வுரை களின் கீழ் அடிக்குறிப்பாகத் தரப்பெற்றுள்ளன. சூத்திரந்தோறும் இவ்விரண்டுரைகளின் பின்னே தொல்காப்பிய மூலத்தையடி யொற்றிக் கருத்துரையும் பொழிப்புரையும் கொண்ட ஆய்வுரைப் பகுதி எளிய நடையில் எழுதிச் சேர்க்கப்பெற்றுள்ளது.

இறையனார் களவியலில் தொல்காப்பிய நூற்பாக்களையும் தொடர்களையும் எடுத்தாண்ட பகுதிகள் இப்பதிப்பில் உரிய இடங்களில் எடுத்துக்காட்டி விளக்கப்பெற்றுள்ளன. உரையாசிரியர் காட்டிய உதாரணப் பாடல்களில், உரையாசிரியர்களால் சிறப்பு முறையில் எடுத்துக்காட்டி விளக்கந்தரப் பெற்றவை உரைகளில் உள்ளவாறே முழுவுருவில் பதிக்கப் பெற்றன. ஏனையவற்றுக்கு முதற்குறிப்பும் நூற்பெயரும் எண்ணும் தரப்பெற்றன.

பதிப்புத்துறை மதுரை காமராசர் பல்கலைக் கழகம்