பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை உவமம் . . 1 93 வேண்டும் என்று தோழி கருதுகின்றாள். இதைத் தலைவனிடம் நேரில் வெளிப்படையாகச் சொல்லாது குறிப்பாகப் பெறவைக் கின்றாள். கீரை எதிர்பார்த்து வந்த குரங்கு தேனை எதிர்பாராது உண்டது போலவே, விலங்கு வேட்டைக்காக வந்த தலைவன் தலைவியை அடைந்தான். மான் வேட்டைக்கு வந்தவன் மான் போன்ற மைவிழிபாளைப் பெற்றான். எல்லையற்ற இன்பம் போதையால் குரங்கு தன் குலத்தொழிலாகிய மரம் ஏறு தலையும் மறந்து மலர்ப்படுக்கையில் துரங்குவது போலவே, தலைவனும் களவு ஒழுக்கமாகிய எல்லையற்ற இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து பல்லோர் அறியத் தலைவியை வசைக்துகொண்டு வாழவேண்டும் என்ற அறிசெறியையும் மறந்து மயங்கி இருக்கின்றான். இவ்வாறு உள்ளுறை உவமத்தால் தோழி தலைவனை விரைவாகத் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணும்படி செய்கின்றான். கருப்பொருள்கள் தலைவனுடன் பேசிய தோழியின் பேச்சில் வாழை, பலா, தேன, சக்தன மரம் போன்ற குறிஞ்சி நிலத்திலுள்ள பொருள்களே வந்துள்ளன. குரங்கும் மிலை காட்டில் காணப்படும் விலங்கே. எனவே, குறிஞ்சி கிலத்தின் கருப்பொருள்களே இவள் கூற்றில் வந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும். கவிஞன் உள்ளுறை உவமையை அமைக்கும் போது அந்தக்த காட்டிலுள்ள கருப்பொருள்களைக் கூறும் முகத்தான் அதனை அமைப்பான். கேட்டோருக்கு அப்பொருள்களின் தன்மைகளை வெளிப்படையாக எடுத்து வருணித்துச் சொல்லுவது போலிருக்கும். ஆனால், அப்படிச் சொல்லும் போது வருணனையின் உள்ளே அடிப்படை யாக வேறொரு கருத்து உறைந்திருக்கும். வருனனையில் வரும் பொருள்கள் அவற்றுக்கு ஒப்பான வேறு ஒருகருத்தை அறிவதற்குப் பயன்படும் உவமை போல் இருக்கும். இவ்வாறு உள்ளுறை உவ மத்தில் வரும் பொருள்களைக்கொண்டு வேறு ஒரு பொருளை கினைக்க முடிவதால் இலக்கண ஆசிரியர்கள் உள்ளுறை உவமையை உவமப் போலி என்று மற்றொரு பெயராலும் குறிப்பிடுவர். தெய்வத்தை அமைக்கார் தமிழர்கள் தெய்வ வழிபாட்டில் சிறந்தவர்கள்; தெய்வத்திற்கு முதல் இடம் கொடுத்து வாழ்கின்றவர் கள். இவ்வுலக வாழ்க்கையையொட்டி வரும் நிகழ்ச்சிகளைக் கூறும் சக்தர்ப்பங்களில் உள்ளுறை உவமையை அமைக்கும்போது கருப்பொருள்களில் தெய்வத்தைத் தவிர, ஏனையவற்றை மட்டிலுக் தான் கொண்டனர். தம் வாழ்க்கையுடன் தெய்வத்தையும் சார்த்திப் பேசி, அதன் சிறப்பை அவர்கள் கெடுக்க விரும்பவில்லை. இதனை நன்குனர்ந்த தொல்காப்பியரும் தாம் நூல் செய்யும்போது இவ் வள்ளுறை அமைக்கும் வழக்கத்தை, தொல்.-13