பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29C தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை வற்றை மறுக்காது ஏற்றுக்கொண்டு அவற்றைப் பாராட்டும் உள்ள மூடையளாதல். இவை நான்கும் முறையே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்று. தற்குரியவை. எ - டு. ஒருநாள் வந்து பலநாள் வருத்து கின்னே போலுகின் தழையே என்வயின் நிற்பா ராட்டியும் சொற்கொளல் இன்றியும் வாய்எதிர் கழறலில் பேரலர் நாணியும் மயல்கூர் மாதர்க்குத் துயர் மருந் தாயினும் நோய்செய் தன்றால் தானே நீதொடக் கசிதலின் ஓரிடத் தானே. என்று கையுறை மறுத்ததாக வத்துள்ள இலக்கண விளக்க மேற். கோன் பழம்பாட்டில் மேற்கூறிய நான்கு மெய்ப்பாடுகளும் முறையே வந்துள்ளமை காண்க. ஐந்தாம் மெய்ப்பாடு : இது காதலின் ஐந்தாங்கூறானவற்றை உணர்த்துகின்தது. தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல் கரந்திடத் தொழிதல் கண்டவழி உவத்தலொடு பொருந்திய கான்கே ஐந்தென மொழிய. என்ற நூற்பாவில் இக்கூறில் உள்ளவற்றை அறியலாம். (1) தெரிந்துடம்படுதல் என்பது தலைவன்-தலைவி இரு வர்க்கும் கூட்டமுண்ம்ை சிலர் பலர்க்குப் புலனாக, அதனால் எழு கின்ற அலருக்குத் தலைவி காண முற்று, இவ்வொழுகலாற்றினைத் தன் பெற்றோக்குத் தெரிவிப்பதா, அன்றி தெரிவியாதிருப்பதா எனத் தடுமாறிப் பின் ஒருவகையால் ஆராய்ந்து, தன் குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண் தன்மைக்கும் ஏற்ற வகையால் சொல்ல வேண்டுவனவற்றைத் தெரிந்துகொண்டு, இன்னவாறு நிகழ்தே தென்று தோழிக்கு உடம்படுதலும் அவள் வழியாகச் செவிலிக்கு உடம்படுதலும் என இன்னோரன்ன குறிப்பினளாதல்.19 (2) திளைப்புவினை மறுத்தல் என்பது தலைவி தலைவ. னுடன் முன்னர்ப் பல நாள் பகற்குதியிலும் இரவுக்குறியினும் மெய்ப் நூற். 17 (இளம்) 10. இஃது அறத்தொடு கிற்றல்’ எனப்படும்.