பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையணி 317 சுட்டிக் கூறா உவமம் : பவளம் போலும் செத்துவர்வாப் என்பது உவமையும் பொருளும் ஆகிய அவ்விரண்டிற்கும் பொதுவாக அமைந்த செம்மைக் குணத்தினைச் சுட்டிக்கூறி உவமஞ்செய்தமையால் சுட்டிக் கூறிய உவமம் எனப்படும். இங்ங்னம் உவமையுடன் பொருளுக்கு அமைந்த ஒப்புமைக் குணத்தினைச் சுட்டிக் கூறாது பவளவாய்’ என்றாற்போல் வரும் உவமம் சுட்டிக் கூறா உவமம் எனப்படும். சுட்டிக்கூறா உவமத் தில் அமைந்த உவமத்தினையும் பொருளினையும் இணைத்து நோக்கி, அவ்விரண்டிற்கும் பொதுவாய்ப் பொருக்தியதோர் ஒப்புமைக் குணம் பற்றி வினை பயன் மெய் உரு என்னும் கான்கனுள் இஃது இன்ன உவமையென்று துணியப்படும் என்பர் ஆசிரியர். - - "சுட்டிக் கூறா உவம மாயின் பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொrலே’9 என்பது தொல்காப்பிய விதி. பவளவாய் என்று உவமை கூறிய கிலையில் வல்லென்ற பவளத்திற்கும் மெல்லென்ற உதட்டிற்கும் உள்ள வன்மை மென்மை பற்றி இங்கு உவமை கொள்ளுதல் பொருந்தாது ; அவ்விரண்டினும் அமைந்த செம்மை சிறம் பற்றியே இங்கு உவமஞ் செய்தது என இவ்வாறு ஒப்பு கோக்கி அறிந்துகொள்ள வேண்டும் என்பர் பேராசிரியர். மேலும், மோப்பக் குழையும் அனிச்சம் முகத்திரிக் து நோக்கக் குழையும் விருக்து’ என்ற குறளின்கண் (குறள் - 90) அது போல’ எனச் சுட்டிக் கூறா உவமையாயினவாறு கண்டு கொள்க. உவமையும் பொருளும் தம்மின் ஒத்துள்ளன என்று உலகத்தார் ஏற்று மகிழும் வகையில் உவமை அமைதல் வேண்டும். "மயில் தோகை போலும் கூந்தல்" என்று சொல்ல வேண்டுமே பன்றி, காக்கைச் சிறகன்ன கருமயிர் என்று கூறல் ஆகாது. இனி, உபமேயமாகிய பொருளை உவமையாக்கி உவமையை உவமிக்கப்படும் பொருளாக்கி மயங்கக் கூறுமிடத்து அஃது உவமம் போல் உபர்க்ததாக்கி வைக்கப்படும். - "வருமுலை யன்ன வண்முகையுடைத்து திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை 9. உவம. - நூற். 7 (இளம்.)