பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. இலக்கிய வளர்ச்சி ஒரு மொழியிலுள்ள நூல்கள் அவ்வக்காலத்திற்கேற்ப மாறுபடுகின்றன. ஒரு நூல் தோன்றுங்காலத்தில் எவை எவை காகரிகமாகவும், அறிஞர்களின் செயல்களாகவும், வியக்கத்தக்க செப்திகளாகவும் கருதப்பெற்றனவோ அவைதாம் அக்காலத்தில் தோன்றும் இலக்கியங்களிலும் பிரதிபலிக்கும். பண்டைக்காலத்தில் அகம், புறம் என்ற துறைகளில் வரையறைப்பட்டு ஆயிரக் கணக்கான பாடல்கள் புலவர்களால் இயற்றப்பெற்றன. அகத் துறைப் பாடல்கள் அளவின்றி எழுந்தன. கி. பி. ஐந்து, ஆறு நூற்றாண்டுகளில் பக்திப் பாடல்கள் தோன்றின. அவற்றினை படுத்துக் காப்பியங்களும், பின்னர், அவற்றினைத் தொடர்ந்து புராணங்களும் எழுந்தன. பெரும்பாலும் இவை யாவும் வடமொழி பிலிருந்த புராணங்களின் மொழி பெயர்ப்பாகும். இஸ்லாமியரின் படையெடுப்பாலும் பிறவற்றாலும் கம் காட்டில் அமைதி குன்றி யிருந்த காலத்தில் பெருங்காப்பிய வளர்ச்சியில் தடை ஏற்பட்டது. இக்காலத்தில் சில்லறைப் பிரபந்தங்கள் பல எழுந்தன. தூது, உலா, காதல், கலம்பகம் போன்றவை இவற்றிற்கு எடுத்துக்காட்டு களாகக் கொள்ளலாம். ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு ஆங்கில அறிவின் தொடர்பினால் இலக்கியப் படைப்பில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலக்கிய வானில் தோன்றிய மறுமலர்ச்சியின் காரணமாகத் தமிழில் புதுப்புது நூல்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சியால் காணும் இத்தகைய மைல் கற்களிலிருந்து நாம் ஒர் உண்மையை அறிகின்றோம். கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப மனிதனுடைய கடையுடை பாவனைகள் மாறி வருகின்றன என்றும், அவற்றிற்கேற்ப அவனது நோக்கங்களும் விருப்பங்களும் மாறுகின்றன என்றும், அவற்றால் அவனால் இயற்றப்பெறும் நூல்களும் புதிய புதிய வடிவங்களைப் பெறுகின்றன என்றும் அறிகின்றோம். அது கிடக்க, செய்யுளின் வகை : தொல்காப்பியர் செப்யுளியலில் செய்யுட்கே உரிய சில மரபுகளைக் குறிப்பிடுகின்றார். செய்யுள் அடிவரையறை உள்ளன, அடிவரையறை இல்லன என்று இரண்டு வகைப்படும். அடிவரையறை உள்ளன ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என்ற பாக்களும் ; தாழிசை, துறை, விருத்தம் என்ற பாவினங்களும் ஆகும். இவற்றின் விவரங்களை மூன்னர்க் கண்டோம். ஈண்டு அடிவரையறை இல்லாதனவற்றைக்