பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐக்திணை கெறி 3 o' மலைக்கு வனப்பூட்டும். மற்றும் பல மரங்கள் விண்ணைத் தழுவி முத்தமிடும், குறிஞ்சி, கோங்கு, மாதவி, மல்லிகை, முல்லை போன்ற, மல;கள் எம்மருங்கும் மலர்ந்து மணம் பரப்பி மனத்தை ஈர்க்கும். மலைப்பகுதிகளில் தேமாங்கனி பழுத்துக் கொத்துக் கொத் தாகக் காட்சியளிக்கும் வருக்கைப்பலா கொம்புகளில் பழுத்துத் தொங்கும் , வாழைப்பழங்கள் குலை குலையாகப் பழுத்துத் தொங்குவதை இங்குக் காணலாம். ஆண் குரங்கு வெடித்த பலாவின் தீஞ்சுளைகளைக் கடித்துக் கடித்துத் தன் பெண் குரங்குகளுக்கு ஊட்டும். பைங்கிளிகள் தம் செம் பவன வாயால் தேமாங்கனிகளைக் கொத்திக் கொத்தித் துணைக் கும் கொடுக்கும். பொன்னிற வண்டுகள் மலரினை ஊதிக் கொடுத்துப் பெண் வண்டைத் தேன் உறிஞ்சத் துரண்டும். யானை மூங்கில்களை ஒடித்துப் பெண் யானைக்குக் கிறையக் கொடுக்கும். ஆண் கவுள் இத்தகைய குறிஞ்சி கிலச்சோலை பசுமை சிறத்தால், தீக்தே. னால், மறுமணத்தால், வண்டொலியால், பசுமையான புல் தரை யினால் ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிக்க வல்லதாக விளங்கும். இச்சோலையை இன்பம் அளிக்க ஏற்ற சூழ்நிலையாகக் கவிஞன் கற்பனை செய்தல் இயற்கைக்கு ஒத்து இருக்கின்றதன்றோ? ஆகவே, பண்டைய ஆசிரியர்கள் இத்தகைய இடத்தைக் காதலர் கள் சக்தித்து இன்பம் அதுபவிக்கும் இடமாகத் தேர்க்தெடுத்தனர். குறிஞ்சித்திணையைப் பாடுவதில் கபிலர் என்ற சங்கப்புலவர் தலைசிறக்து விளங்கினதாக அவர் அகத்திணை பற்றிப் பாடியுள்ள பாடல்களால் அறிகின்றோம். பாலை கிலம் : காதலால் கூடிக் கலந்த இருவரது பிரிவு ஒழுக்கததினைக் குறிப்பது பாலைத்திணை. பிரிந்து செல்லும் இடத்தின் இடர்ப்பாடுகளை அதிகமாகக் காட்டக் காட்டப் பாட்டின் சுவை பன்மடங்கு அதிகமாகும். எனவே, அதற்கேற்ற கிலைக் களத்தை, சூழ்நிலையைக் கவிஞர்கள் தேர்ந்தெடுப்பர். கோடைக் காலத்தில் எங்கும் வெப்பம் பொறுக்க முடியாத கண்பகலில் மரங்க ளெல்லாம் காய்ந்து கரிக் து கிற்கும் வெஞ்சுரம் : மழையே இல்லாத கொடிய நிலம்: குடிர்ே என்பது அங்குக் குதிரைக்கொம்பு. பாலை நிலத்தின் கொடுமையை அசதிக் கோவையாசிரியர் மிக கடமாகக் காட்டுவர். குட்டினால் அவ்வெஞ்சுரம் எவ்வாறு கொதிக்கும். என்பதை,