பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இதனுள் ஐகாரவுருபு பல அடுக்கி ஒருபொருட்கண் வந்து, ‘வளேகவர்ந்தான் என்னலும் ஆகுமோ? என்பதைேடு முடிந்தது. கொல்லிப் பொருப்பற்ை கொங்கர் பெருமானல் வில்லிற் பகைகடிந்த வேந்தல்ை-அல்லியந்தார் கோதையால் வையங் குளிர்துங்க என்கொலோ பேதையார் எய்துவது பேது.? இதனுள் மூன்ருமுருபு அடுக்கி வந்து குளிர்தாங்க என்பத ளுேடு முடிந்தது . அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன்கோல்’ என்புழி நான்கா முருபு அடுக்கிவந்து ஆதி யாய் என்பதைேடு முடிந்தது. வீரப் புலியானின் வெல்போர் வளவனிற் கோரப் பரியுறந்தைக் கோமானின்-ஆரலங்கல் மற்படுதோட் செம்பியனின் மல்லன் மணிநேரி வெற்பனிற் றீர்ந்துளவோ வேந்து. இதனுள் ஐந்தாமுருபு பல அடுக்கி வந்து தீர்ந்து என்பத ளுேடு முடிந்தது. இவ்வாறே ஏனையுருபுகளும் ஒன்ருய் அடுக்கி ஒரு முடிபு பெறுதல் கொள்க. 'யாணேயது கோட்டை நுனிக்கண் வாளாற் குறைத்தான்: என்புழி இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் மூன்ரும் வேற்றுமையும் விரவியடுக்கி வந்து குறைத்தான்: யைக் கடியும்’ என்புழி ஐந்தாம் உருபும் இரண்டா முருபும் விரவியடுக்கிவந்து கடியும்’ என்னும் ஒருவினை கொண்டு முடிந்தவாறும் காண்க. இவ்வாறு ஒருருபு தொடர்ந்தடுக்கியும் பலவுருபுகள் விரவி யடுக்கியும் ஒரு சொல்லான் முடியும் இம்முடிபினே, வினைச் சொற்கள் பல அடுக்கி ஒரு சொல்லால் முடியும் முடிபுடன் இயைத்துக் கூறுவது,