பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பாகிய அது எனப் பொருள் தருவதன்றி ஐ முதலிய ஆறுருபு கள் எனப் பொருள் தருதல் கூடாமையானும், ஆறனுருபு என்புழி வந்த அன் சாரியை தவிர் வழிவந்த சாரியை யன் றென்பது, ஆறனெருமைக்கு (நன்-300) ஏழனுருபு: (ஷெ 301) எட்டனுருபே? (ஷெ 308) எனவரும் சூத்திரங் களின் சொல்லமைப்பில்ை இனிது விளங்குதலானும், பிறிது பிறிதேற்றல் என்னுந் தொல்காப்பியத் தொடர்க்கு இளம்பூரணர் கூறிய உரையைத் தழுவி யெழுந்தது இந்நன்னூற் சூத்திர மாதலானும் இதற்கு மயிலேநாதர் கூறிய உரையே பவணந்தியார் கருத்திற்கு ஏற்புடையதாதல் அறிக. ளடு. ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகா அ விறுதியான இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்) ஐகார வேற்றுமைப் பொருளும் கண்ணென் வேற்று மைப் பொருளும் அல்லாத பிறபொருள்மேல் நின்ற உருபுகள் தொடர்மொழியிறுதிக்கண் மறைந்து நில்லா. எ-று. மேற் சூத்திரத்தால் எல்லா வேற்றுமை யுருபுகளும் தொடரி றுதிக்கண் தொகும் என எய்தியதனை விலக்கி இரண்டும் ஏழு மாகிய வேற்றுமை யுருபுகளே தொடரிறுதிக்கண் தொகுவன; அல்லன தொகா என வரையறுத்தவாறு. 'அறங்கறக்கும்’ என இடைக்கண் மறைந்து நின்ற நான்கா முருபு கறக்கும் அறம் என இறுதிக்கண் மறைந்து நில்லாமை கண்டுகொள்க. இவ்வாறு தொடரிறுதிக்கண் தொகுதல் ஐயும் கண்ணு மாகிய இவ்விரண்டிற்குமன்றி ஏனைய உருபுகட்கு ஒவ்வாமை யானும் இடையிற்ருெகுதல் ஆறுருபுகட்கும் பொருந்துதலா னும் இறுதிக்கண் தொகுவன தொகைச் சொல்லெல்லாம் ஒரு சொல் நடைய’ என்னும் தொகையிலக்கணத்திற்கு ஏலாமை யானும்,