பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 இது முதல் ஐந்து சூத்திரங்கள் நால்வகைச் சொற்கும் பொது விலக்கணங் கூறுதலின் தொடர்மொழி யிலக்கணமாகிய வேற் றுமை யிலக்கணத்தை யடுத்துத் தனி மொழியிலக்கணம் கூறும் பெயரியலின் முன்னர் வைக்கப்பெற்றன. ளடுகள். பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனுர் புலவர். இது, சொற்கள் பொருளுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) சொல்லின் வேருகிய பொருட்டன்மை அறியப் படுதலும், சொல்லின் தன்மையறியப்படுதலும் அச்சொல்லில்ை ஆகும் என்று சொல்லுவர் புலவர். எ-று. (உ-ம்: ) சாத்தன் வந்தான், பண்டு காடுமன், உறுகால்இவை தம்மின் வேருகிய பொருளே உணர்த்தின. செய்தெனெச் சம், தஞ்சக்கிளவி, வேறென் கிளவி, செய்தென் கிளவி, கடி யென் கிளவி, - இவை வேறு பொருளுணர்த்தாது சொல் லாகிய தம்மையேயுணர்த்தின. ளடுஎ. தெரிபு வேறு நிலையலுங் குறிப்பிற் ருேன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. இது, மேற்குறித்த பொருண்மை தெரிதலின் பாகுபாடு கூறு கின்றது . (இ-ள்) மேற்கூறப்பட்ட பொருட்டன்மை தெரிதல், சொன்மை மாத்திரத்தாற் பொருள் விளங்கி வேறு நிற்றலும் அவ் வாறு சொல்லாற் ருேன்ருது சொல்லோடு கூடிய குறிப்பிற்ை பொருள் தோன்றி நிற்றலும் ஆகிய இரண்டு பகுதிப்படுமென்று கூறுவர் ஆசிரியர். எ-று. (உம்ை.) அவன், இவன், உவன், வந்தான், சென்ருன் என்புழி உயர்தினையாண்பாற்பொருள் சொல்லின் வேருக விளங்கித் தோன்றியது. சொல்லுவான் குறிப்பினுல் ஒருவர் வந்தார்? என்புழி வந்தவர் ஆணுே பெண்ணுே என்பது புலப் பட நிற்றலின் குறிப்பிற்ருேன்றலாகும்.